மின்சார ரயிலில் 'ஸ்கர்ட்' அணிந்து உலாவந்து அசத்திய ஆண்!

மின்சார ரயிலில் 'ஸ்கர்ட்' அணிந்து உலாவந்து அசத்திய ஆண்!

மும்பையில் ஆண் ஒருவர், பெண்கள்போல ஸ்கர்ட் அணிந்து உள்ளூர் ரயிலில் உலா வந்து பயணிகளை அசத்தினார்.

விதம் விதமான ஆடைகளை அணிவதற்கு எல்லையே இல்லை என்று சொல்லலாம். சமீபகாலமாக பெண்கள், ஆண்டு முழுவதும் ஆண்களைப் போல பேன்ட் மற்றும் ஷர்ட், டீஷர்ட் அணிந்து வெளிவரத் தொடங்கியுள்ளனர். இப்போது ஆண்களும், பெண்கள் மட்டுமே அணியும் ஆடைகளை அணிந்து உலாவரத் தொடங்கியுள்ளனர்.

இதுபோன்ற ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. ஆடவர் ஒருவர் பெண்களைப் போல ஸ்கர்ட் அணிந்து, முகத்தில் கறுப்பு கண்ணாடியுடன், மும்பை மின்சார ரயிலில் ஒய்யார நடையுடன் உலாவந்து பயணிகளை அசத்தினார். இந்த விடியோ வைரலாகியுள்ளது.

அவரது பெயர் சிவம் பரத்வாஜ் என்பதும், அவர் ஒரு பேஷன் டிஸைனர் என்பதும், அவரை இன்ஸ்டாகிராமில் 30,000 பேர் பின்தொடர்வதும் தெரியவந்துள்ளது. அந்த விடியோவின் கீழ் “மும்பை மின்சார ரயிலில், நான் பெண்கள் அணியும் ஸ்கர்ட் அணிந்து கம்பீரமாக சென்றேன்”

என்று குறிப்பிட்டுள்ளார். அவர் பலரையும் ஈர்க்கும் நோக்கில் அடிக்கடி பெண்களுக்கான புதுப்புது ஆடைகள் அணிந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அந்த விடியோவில் பரத்வாஜ், கறுப்பு நிற ஸ்கர்ட் அணிந்து, முகத்தில் கறுப்பு கண்ணாடியுடன் மனதில் அதீத தைரியத்துடன் ஒரு மாடல் போல கம்பீரமாக மும்பை ரயிலில் உலாவரும் காட்சி பதிவாகியுள்ளது. அந்த ரயிலில் பயணம் செய்த பயணிகள் பலரும் இதை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

இந்த விடியோவை பார்த்த ஒருவர், “இப்படி எந்த ஒரு ஆணும் பெண்களின் உடையை அணிந்து பொது இடத்தில் வரமாட்டார்கள். போலியாக நடிப்பதை நிறுத்துங்கள்” என்று கருத்து வெளியிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த விடியோவுக்கு மேலும் பலர் தங்களது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். “உங்களது ஸ்டைல் நடை சூப்பர். உங்களது அதீத் நம்பிக்கையை பாராட்டுகிறேன்” என்று ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர் “பேஷன் உடை அணிந்து வரும் மாடல்களை நான் மேடையில்தான் பார்த்திருக்கிறேன். இப்போது ரயிலில் பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். “ரயில் தீப்பற்றி எரியப்போகிறது. சீக்கிரம் தீயணைப்பு துறையினருக்கு அழைப்பு விடுங்கள்” என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார். "சூப்பர், உங்களிடம்

கிளாமர் இருக்கிறது. நீங்கள் மாடல் துறையில் இறங்கினால் என்ன?” என்று கேட்டு பதிவிட்டுள்ளார். பரத்வாஜின் செயல்பாடுகள் சமூக வலைத்தளத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com