ஆன்லைன் கேம்களுக்கு புதிய சட்டம். இந்திய அரசாங்கம் அதிரடி.

ஆன்லைன் கேம்களுக்கு புதிய சட்டம். இந்திய அரசாங்கம் அதிரடி.

நீங்கள் ஒரு அதிதீவிர இணைய விளையாட்டுப் பிரியராக இருந்தால் இந்த பதிவு உங்களுக்காகத் தான். இணைய விளையாட்டுகளுக்கான புதிய விதிகளை இந்திய அரசாங்கத்தின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவித்துள்ளது. 

இளையோர் முதல் பெரியோர் வரை இணைய விளையாட்டுகளுக்கு அதிகமாய் அடிமையாகி வருகின்றனர். ஆன்லைன் கேம்கள் பொழு துபோக்கிற்காக விளையாடப்படுகின்றன என்றாலும், பலரும் தங்களையே தொலைத்து அதற்கு அடிமையாகி விடுகின்றனர். இந்த விளையாட்டுகளுக்கு அடிமை யாவதும் போதைப் பொருளுக்கு அடிமையாவதும் ஒன்றுதான். வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் பெரும்பாலானவர்கள் தங்களை இந்த சமூகத்திலிருந்தே விலகி தனிமையாக இருக்கின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் பணத்தை இழப்பது மட்டுமல்லாமல், வாழ்க்கையின் நிம்மதியையே முழுவதும் இழந்து விடுகிறார்கள். 

இணைய விளையாட்டு என்பது கம்ப்யூட்டர் ரிசோர்ஸ் மற்றும் இடைத்தரகர் வாயிலாக ஒரு பயனர் ஆன்லைனில் அணுகக்கூடிய விளையாட்டாகும். ஆன்லைன் விளையாட்டு என்ற பெயரில் சட்டவிரோதமாக நடக்கும் பெட்டிங் விளையாட்டுகளிலிருந்து மக்களை காப்பதற்கு, புதிய விளையாட்டு விதிகளை இந்திய அரசாங்கம் கொண்டு வந்துள்ளது. இதனால் நிஜ பணத்தைப் பயன்படுத்தி விளையாடும் பெட்டிங் விளையாட்டுகளை தடை செய்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. 

இந்த புதிய விதிமுறையால், இணைய கேம்கள் மற்றும் அதுசார்ந்த விளம்பரங்கள் உட்பட  பெட்டிங் சம்பந்தப்பட்ட அனைத்து இணையதளங்களும் முற்றிலும் தடை செய்யப்படுகிறது. இந்த புதிய விதிகளானது பேண்டஸி கேம்களான டிரீம் 11 போன்றவற்றை அனுமதிக்கிறது. ஏனென்றால் இவை பயனர்களுக்கு எவ்விதமான தீங்குகளையும் விளைவிக்காத மற்றும் குழந்தைகளை அடிமையாக்கும்படியான எவ்வித பிரச்சினைகளையும் ஏற்படுத்தாத கேம் என அரசாங்கம் சொல்கிறது. 

இந்த புதிய சட்ட விதிகளின்படி ஃபேண்டஸி கேம் நிறுவனங்களால், பயனர்களுக்கு நேரடி கடனோ அல்லது எவ்வித மூன்றாம் தரப்பு செயலிகள் வாயிலாகவோ நிதி உதவியோ எதுவும் வழங்கக்கூடாது. மேலும் வித்ட்ராவல் அல்லது ரீஃபண்ட் டெபாசிட் கொள்கையை பேண்டஸி கேம் நிறுவனங்கள் தன் பயனர்களுக்கு தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். பணம் தொடர்பான இணைய விளையாட்டுகளில் விளையாடும் நபர்கள் KYC விவரங்களை கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது. 

இணைய விளையாட்டுகளுக்கு அடிமையாதல் மற்றும் நிதி இழப்பிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான கட்டமைப்பை உருவாக்க சுய ஒழுங்கு நிறுவனங்கள் உதவி செய்யும் என்றும், இதில் அரசாங்கம் நேரடியாக தலையிடாமல், ஆன்லைன் விளையாட்டுகளில் நிபுணத்துவம் பெற்ற பிரதிநிதிகள் மற்றும் கேமர்கள் இடம் பெறுவார்கள் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com