தூய நரையிலும் கவலை தொடருதே.... ஓய்வூதியமும் சேமிப்பும் - முதியோர் வாழ்க்கை எப்படி இருக்கிறது?

தூய நரையிலும் கவலை தொடருதே.... ஓய்வூதியமும் சேமிப்பும் - முதியோர் வாழ்க்கை எப்படி இருக்கிறது?

எண்பது வயதிலும் ஓய்வின்றி உழைப்பவர்களைப் பற்றி நிறைய பேச வேண்டியிருக்கிறது. ஆனால், அறுபது வயதை நிறைவடைந்தபின்னர் ஓய்வுபெற நினைப்பவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சிக்கல்களை மட்டும் பார்ப்போம்.

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியம் என்பது முக்கியமான வாழ்வாதாரம். பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டுமென்று அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருவதற்கான காரணமும் இதுதான். ஆனால், ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கு அவர்களது சேமிப்புத்தான் கடைசிவரை பாதுகாத்து வருகிறது-

இந்தியாவில் ஓய்வு பெற்றோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. தனிநபர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பது ஒரு பக்கம் இருந்தாலும், இளம் வயதிலேயே ஓய்வு பற்றிய நிறைய பேர் திட்டமிட ஆரம்பித்திருக்கிறார்கள். ஓய்வு பெற்ற பின்னர் அன்றாடச் செலவுகளுக்காகவும், மருத்துவ செலவுகளுக்காகவும் தனியாக சேமித்து வருகிறர்ர்கள்.

ஓய்வுக்காலம் மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டுமென்றால் ஓய்வூதியம் சரியான முறையில் கிடைக்கவேண்டும். போதுமான சேமிப்பு கைவசம் இருந்தாக வேண்டும். இந்தியாவில் ஒய்வு பெற நினைப்பவர்களின் மனவோட்டம் எப்படி இருக்கிறது என்பதையும் ஆய்வறிக்கை சில சுவராசியமான செய்திகளை தருகிறது.

தற்போதுள்ள நிலைமை, ஓய்வுக்காலத்திலும் தொடர்ந்து இருந்தால் போதுமானது என்று 83 சதவீதம் பேர் நினைக்கிறார்கள். தற்போதையை நிலையை விட எந்த விதத்திலும் நிலைமை மோசமாகிவிடக்கூடாது என்கிற எச்சரிக்கை பெரும்பாலானவர்களுக்கு மத்தியில் இருக்கிறது. ஒரு சிலரே ஆன்மீகப் பயணங்களிலும், சேவை செய்வதிலும் ஈடுபாடு காட்டுகிறார்கள். அதிலும் வெகுசிலரே ஓய்வுக்காலத்தில் சொந்தமாக தொழில் தொடங்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஓய்வுபெற்றவர்களுக்கான செலவுகளை எப்படி சமாளிக்க நினைக்கிறார்கள்? மாதம்தோறும் ஓய்வூதியம் கிடைப்பதை விரும்பவர்கள், 52 சதவீதம் பேர் இருக்கிறார்கள். ஏற்கனவே சேமிப்பை, வங்கிகளில் பிக்ஸெட் டெபாசிட் ஆக வைத்திருப்பதால் அதிலிருந்து வரும் வட்டியை பிரதான தொகையாக 40

சதவீதம் பேர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். பங்குச் சந்தை, மியூச்சல் பண்ட் போன்றவற்றில் தங்களுடைய பணத்தை முதலீடு செய்பவர்கள் 10 சதவீதம் கூட இல்லை என்கிறது ஆய்வு.

சொந்த வீட்டை வாடகைக்கு விடுவதன் மூலமாக வருமானம், சொந்த தொழிலின் மூலமாக வருமானம் தேடுவது, விவசாய வேலைகள் செய்து ஊதியம் பெறுவது போன்றவற்றை ஓய்வுக்காலங்களில் திட்டமிடுபவர்கள் உண்டு. ஓய்வுத்திட்டங்களில் பிரபலமாக இருப்பது புதிய பென்ஷன் திட்டமும், வங்கிகளின் பிக்ஸெட் டெபாசிட்டும்தான். அதற்கு அடுத்த நிலையில் அஞ்சலக சேமிப்புத்திட்டங்கள் உள்ளன. ஏனோ, தங்கத்தை சேமித்து கையில் வைத்திருக்க முதியோர்கள் விரும்புவதில்லை.

ஓய்வுபெற்றவர்கள் தங்களுடைய சேமிப்பை எதில் அதிகமாக செலவழிக்கிறார்கள் என்று எடுக்கப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் சில ஆச்சர்யத்தை தருகின்றன. 24 சதவீதம் பேர் மட்டுமே தங்களுடைய சேமிப்பை செலவழிக்க நினைக்கிறார்கள். 38 சதவீதத்திற்கும் மேலானவர்கள் தங்களுடைய வாழ்க்கைத் துணைக்காகவும், குடும்பத்தினருக்காகவும் சேமித்து வைக்கவே நினைக்கிறார்கள். சுடுகாட்டுக்குச் செல்லும் நிலையிலும் சேமிக்கும் எண்ணத்தை இந்தியர்கள் கைவிடுவதில்லை என்பது உண்மைதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com