சகிப்புத்தன்மை இல்லாத அரசியல்: உண்மையை ஒருநாளும் மறைக்க முடியாது - பிபிசி ஆவணப்படம் பற்றி ராகுல் காந்தி கருத்து!

சகிப்புத்தன்மை இல்லாத அரசியல்: உண்மையை ஒருநாளும் மறைக்க முடியாது - பிபிசி ஆவணப்படம் பற்றி ராகுல் காந்தி கருத்து!

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, மத்திய அரசுக்கு எதிராக நாட்டு மக்களை ஒன்றுதிரட்டும் முயற்சியாக நாடு முழுவதும் ஒற்றுமை யாத்திரை நடத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழகத்தில் தொடங்கிய அவரது ஒற்றுமை யாத்திரை கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக ஜம்மு காஷ்மீரில் நுழைந்துள்ளது.

ராகுலின் யாத்திரைக்கு கல்வியாளர்கள், பொருளாதார நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள். அரசியல் தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீர்ர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “ 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக பி.பி.சி. தயாரித்துள்ள ஆவணப் படத்துக்கு இந்திய அரசு தடைவித்துள்ளது. ஆனாலும் உண்மைகளை மறைக்க முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளார்.

பி.பி.சி. தயாரித்துள்ள அந்த ஆவணப்படத்தில் பிரதமர் மோடிக்கு சில கேள்விகள் என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த கலவரம் நடந்த சமயத்தில் மோடி, குஜராத் முதல்வராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிவிவகாரங்கள் துறை அமைச்சகம் இந்த ஆவணைப் படத்துக்கு தடை விதித்துள்ளது. இதுதான் சகிப்புத்தன்மை இல்லாத அரசியலாகும் என்று ராகுல் கூறியுள்ளார்.

உண்மைகளை மறைக்க முடியாது. உண்மை எப்படியும் வெளிவரும். இது ஜனநாயக நாடு. நீங்கள் எவ்வளவுதான் உண்மையை மறைக்க முயன்றாலும் ஏதாவது ஒரு வழியில் அது வெளிப்பட்டுவிடும் என்றார் ராகுல்.

இங்கிலாந்தின் அதிகாரபூர்வ ஒளிபரப்பு நிறுவனமான பிபிசி தயாரித்துள்ள இந்த ஆவணப் படம் எந்த நோக்கமும் இல்லாமல்

ஒருதலைபட்சமாக உள்ளது. இதை ஒருபோதும் ஏற்கமுடியாது என்று மத்திய அரசு கூறிவிட்டது.

இந்த ஆவணப்படத்தை யூடியூப், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிடவும் மத்திய அரசு தடைவிதித்துள்ளது. ஆனால், நீண்ட ஆய்வுக்கு பின்னரே இது தயாரிக்கப்பட்டுள்ளதாக பிபிசி கூறிவருகிறது.

எனது புகழை கெடுக்க பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் கோடிக்கணக்கில் செலவிட்டு வருகின்றன. ஆனால், பணமோ, அதிகாரமோ அல்லது ஆணவமோ ஒருபோதும் வெற்றிபெறாது. உண்மை நிச்சயம் ஒருநாள் வெளிப்படும்.

என்னை பா.ஜ.க.வினர் ‘பப்பு’ என்று கூறிவருகின்றனர். அதாவது, ஒன்றும் தெரியாதவன் என்று கூறிவருகின்றனர். ஆனால், நான் யார் என்பதை இந்த யாத்திரையின் முடிவில் அவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com