வட மாநிலங்களில் தொடரும் நில அதிர்வுகள் பொது மக்கள் அச்சம் ....!

வட மாநிலங்களில் தொடரும் நில அதிர்வுகள் பொது மக்கள் அச்சம் ....!

அசாமில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவானது.

கடந்த சில மாதங்களுக்கு முன் துருக்கியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து இந்தியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அசாம் மாநிலம் குவஹாத்தி உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவாகியுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அசாமின் சோனித்பூர் பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததை உணர முடிந்ததாக மக்கள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

முன்னதாக ஆப்கானிஸ்தானில் நேற்று காலை 10.19 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பஞ்சாப், காஷ்மீர், ஹரியானா உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. இதனை தொடர்ந்து டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கம், காலை 11.23 மணியளவில் ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். டெல்லி மட்டுமின்றி, சண்டிகர் உட்படப் பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பல பகுதிகளிலும் நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக இந்தியாவின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி காலை 11:19 மணிக்கு 220 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேற்று பாகிஸ்தானின் இஸ்லாமபாத், பலுசிஸ்தான், பஞ்சாப் மாகாணங்களிலும் கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.3 ஆகப் பதிவானது.

ஆப்கானிஸ்தானின் பைசாபாத் நகரில் இருந்து 70 கி.மீ தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.9 அலகுகள் பதிவாகி இருந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com