ஐடி சேவை நிறுவனங்களின்  காலாண்டு முடிவுகள் ! ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!

ஐடி சேவை நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் ! ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!

இந்தியாவின் 4 முன்னணி ஐடி சேவை நிறுவனங்களும் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ள வேளையில் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் முக்கியமான சில தகவல்களும் வெளியாகியுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஆரம்பம் முதலே ஐடி சேவை நிறுவனங்களின் பணிநீக்கம் குறித்த அச்சத்துடன் துவங்கிய நிலையில் காலாண்டு முடிவுகளைத் தாண்டி எங்குத் திரும்பினாலும் பணிநீக்க அறிவிப்புகள் ஐடி ஊழியர்களைப் பயமுறுத்தி வருகிறது

இந்திய ஐடி துறைக்கு ஆட்குறைப்பு மற்றும் பணிநீக்கம் குறித்து எவ்விதமான பிரச்சனையும் இல்லை எனக் கூறப்பட்டாலும், உண்மையில் முன்னணி ஐடி சேவை துறை நிறுவனங்களும் இது குறித்த அச்சத்தை எதிர்கொள்ளத் துவங்கியுள்ளது என்று தான் சொல்லவேண்டும்.

இதை உறுதி செய்யும் வரையில் இந்தியாவின் 4 முன்னணி ஐடி சேவைநிறுவனங்களும் புதிதாகச் சேர்க்கப்டும் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. குறிப்பாக இன்போசிஸ் நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

சிலில் பாரீக் தலைமையிலான இன்போசிஸ் நிறுவனத்தில் புதிதாக நிறுவனத்தில் சேர்க்கப்படும் ஊழியர்கள் எண்ணிக்கை எப்போதும் இல்லாமல் 84 சதவீதம்சரிந்து வெறும் 1,627 ஆக உள்ளது, கடந்த காலாண்டில் இதன் எண்ணிக்கை10000 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேவேளையில் இன்போசிஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் முந்தைய காலாண்டில் இருந்த 27.10 சதவீதத்தை ஒப்பிடுகையில் டிசம்பர் காலாண்டில் 24.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் சந்தையில் பிற முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் எண்ணிக்கை குறைந்துள்ளதால் வெளியேறும் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றும் கூற முடியும்.

இன்போசிஸ் நிறுவனத்தின் கடந்த 9 காலாண்டில் குறைவான ஊழியர்களைப் பணியில் சேர்த்தது இந்த டிசம்பர் காலாண்டு தான். கடைசியாக ஜூலை - செப்டம்பர் 2021 காலாண்டில் இன்போசிஸ் 975 ஊழியர்களை மட்டுமே புதிதாகப்பணியில் சேர்த்தது.

டிசம்பர் 2022 காலாண்டு முடிவில் இன்போசிஸ் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை என்பது 3,46,845 ஆக இருந்தது. இந்த நிலையில் இன்போசிஸ் தலைமை நிதியியல் அதிகாரி 2023 ஆம் நிதியாண்டு இலக்கான 50000 ஊழியர்கள் சேர்ப்பை கட்டாயம் அடைந்து விடுவோம் எனத் தெரிவித்தார்.

இதே காலகட்டத்தில் இன்போசிஸ்-ன் சக போட்டி நிறுவனமும் நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் செப்டம்பர் காலாண்டில் 9840 ஊழியர்களைப் பணியில் சேர்த்தது, ஆனால் 3வது காலாண்டில் 2,197 பேர் குறைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு இதே டிசம்பர் காலாண்டில் டிசிஎஸ் 28,238 ஊழியர்களைச் சேர்த்துஇருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள்எண்ணிக்கை டிசம்பர் 31 ஆம் தேதி முடிவில் 6,16,171ல் இருந்து 6,13,974 ஆகக் குறைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com