இந்தியாவில் 'பாண்டிங் ஒயின்ஸ்' தொடங்கிவைத்த ரிக்கி பாண்டிங்!
டெல்லி டூட்டி ஃப்ரீ, முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டனும், டெல்லி கேப்பிடல்ஸ் தலைமை பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங்குடன் இணைந்து 'Ponting Wines'-களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், டூட்டி ஃப்ரீயில் இதற்காக நடந்த பிரத்யேக நிகழ்ச்சியில், ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் கலந்துகொண்டு, தனது நிறுவன தயாரிப்பான 'Ponting Wines'-களை தொடங்கிவைத்தார். இந்த சிறப்பு நிகழ்வில் கலந்துகொண்ட பயணிகளுக்கு விருந்தும் அளிக்கப்பட்டது.
இந்த சந்திப்பு நிகழ்ச்சியில், கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் ஒயின் பிரியர்களை உற்சாகப்படுத்தும் வகையில், டெல்லி டூட்டி ஃப்ரீ 'பாண்டிங் ஒயின்' பாட்டிலை வாங்கியவர்களுக்கு, பாண்டிங் ஆட்டோகிராப் செய்யப்பட்ட கூகபுரா மட்டையை வெல்லும் வாய்ப்பை அளித்தது.
பாண்டிங் ஒயின்ஸ் என்பது, பாண்டிங் மற்றும் பென் ரிக்ஸ் என்ற விருது பெற்ற ஆஸ்திரேலியன் ஒயின் தயாரிப்பாளரின் கூட்டமைப்பில் உருவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.