ரூ.2 லட்சம் ஸ்வாஹா! ஆன்லைனில் கார் புக் செய்ய முயன்ற இளைஞருக்கு நேர்ந்த பேரதிர்ச்சி! - எப்படி நிகழ்ந்தது என்ற ரிப்போர்ட் இங்கே..

ரூ.2 லட்சம் ஸ்வாஹா! ஆன்லைனில் கார் புக் செய்ய முயன்ற இளைஞருக்கு நேர்ந்த பேரதிர்ச்சி! - எப்படி நிகழ்ந்தது என்ற ரிப்போர்ட் இங்கே..

ஸைபர் ஃப்ராடு, ஆன்லைன் ஸ்கேம் என்ற பெயரில் கடந்த சில வருடங்களாக இந்தியாவில் ஆன்லைன் ஃப்ராடுலன்ஸ் வழக்குகளும், புகார்களும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அந்தக் கணக்கில் சமீபத்தில் சேர்ந்திருக்கிறது மும்பை சாஃப்ட்வேர் இளைஞருக்கு நேர்ந்த அதிர்ச்சி அனுபவம்.

சாஃப்ட்வேர் இளைஞர் மும்பையில் இருந்து நாசிக் செல்வதற்காக தனியார் டிராவல் ஏஜென்ஸி ஒன்றில் ஆன்லைன் மூலமாக கேப் புக் செய்ய முயன்றார்.

அதற்காக டிராவல் ஏஜென்ஸியின் வெப் சைட்டில் தனது கிரெடிட் கார்டு யூஸர் நேம்,பாஸ் வேர்டு, எக்ஸ்பயரி டேட், ஓ டி பி எண் உள்ளிட்ட தகவல்களை உள்ளிட்டார். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த வெப் சைட் கேப் புக்கிங் செய்ய ஒத்துழைக்கவில்லை. இந்நிலையில் இரண்டு முறை முயற்சி செய்து பார்த்து விட்டு இளைஞர் அந்த வெப்சைட் வேலைக்காகவில்லை என ஒதுங்கிய போது சில நிமிடங்களில் அவருக்கு ஒரு அலைபேசி அழைப்பு வந்தது.

அலைபேசியில் அவரைத் தொடர்பு கொண்ட நபர், தன் பெயர் ரஜத் என்றும், தான் அந்த டிராவல் ஏஜென்ஸி அலுவலகத்தின் கஸ்டமர் கேர் பிரிவில் பணிபுரிவதாகவும் கேப் புக்கிங் செய்வதில் தான் அவருக்கு உதவுவதாகவும் தெரிவித்தார். அதனால், அவர் வழிகாட்டுதலின் படி முதலில் ரூ 100 மட்டும் டிராவல் ஏஜென்ஸியின் வெப்சைட்டில் நெட் பேங்கிங் மூலமாக மும்பை இளைஞரைச் செலுத்தச் சொன்னார்.

மும்பை இளைஞர், டிராவல் ஏஜென்ஸி நபரான ரஜத் சொன்னதை முயற்சித்தார். அப்போது டிராவெல் ஏஜென்ஸியின் யூ ஆர் எல் லை உள்ளீடு செய்யும் போது அது நேராக அந்த வெப்சைட்டுக்குச் செல்லாமல் ரீடைரக்ட் ஆகி வேறு ஏதோ வெப்சைட்டுக்குச் சென்றது. இதனால் தனது முயற்சி தோல்வி அடைந்தது என்று கருதி அந்த டிரான்ஸாக்சனைத் துண்டித்து விட்டு வீடு திரும்பினார் மும்பை இளைஞர்.

இந்நிலையில் அன்றிரவு மும்பை இளைஞருக்கு குறுஞ்செய்தி மூலமாக அவரது கிரெடிட் கார்டு மூலமாக அவரது அக்கவுண்டில் இருந்து முதலில் ரூ 81,400, பின்னர் ரூ 71,085 கடைசியாக ரூ1.42 லட்சம் ரூபாய்கள் எடுக்கப்பட்டதாகத் தகவல் வந்திருக்கிறது. இதனால் குழம்பிப் போன மும்பை இளைஞர் உடனடியாகத் தான் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கியின் கஸ்டமர் கேர் பிரிவைத் தொடர்பு கொண்டு தனது கிரெடிட் கார்டை பிளாக் செய்தார் என்கிறார்கள் பிறகு இவரது வழக்கைப் பதிவு செய்த மும்பை போலீஸார்.

சம்மந்தப்பட்ட வங்கியின் கஸ்டமர் கேர் பிரிவின் உதவியால் இழந்த தொகையில் ரூ. 71,085 பணத்தை மீட்க முடிந்த போதும் மீதி 2 லட்சத்துக்கும் அதிகமான தொகை ஸ்வாஹா ஆனது மும்பை இளைஞரைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இவரது புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மும்பை போலீஸின் ஆன்லைன் ஃபிராடுலன்ஸ் பிரிவைச் சேர்ந்தகாவல்துறை அதிகாரிகள் தெரிவிப்பது என்னவென்றால், இவரது வழக்கை தற்போது அதிகரித்து வரும் ஃபார்மிங் ஆன்லைன் ஃப்ராடுலன்ஸ் வகையின் அடிப்படையில் விசாரித்து வருவதாகத் தெரிவித்தனர்.

Pharming என்பது சைபர் அட்டாக் வகையில் ஒரு விதம். இதன் மூலமாக ஹாக்கர்கள் குறிப்பிட்ட வெப்சைட்டின் ஒரிஜினல் தரவுகளைத் திருடி அதே போலவே மற்றொரு திருட்டு வெப்சைட் யூ ஆர் எல் உருவாக்கி குறிப்பிட்ட ட்ராவல் வெப்சைட்டை அணுகுபவர்களை திசை திருப்பி தங்களது மோசடி வெப்சைட்டுக்கு வரச் செய்து அங்கு அவர்களுக்குத் தேவையான பணப்பரிவர்த்தனை தகவல்களைப் பெற்றுக் கொண்டு பணத்தைப் பெருமளவில் மோசடி செய்து வருகிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.

ஆகவே ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளில் ஈடுபடும் போது நாம் சரியான URL ஐ உள்ளீடு செய்யும் போது கூட சில நேரங்களில் நாம் நமக்கான சரியான வெப்சைட்டில் இருந்து வேறொரு வெப்சைட்டு திருப்பி விடப்படுகிறோம் எனில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

இது போல நேரும் போது மிகவும் சென்ஸிடிவ்வான தகவல்களாகக் கருதப்படும் பாஸ் வேர்டு, கிரெடிட் கார்டு நம்பர்கள், போன்ற ரகசிய தகவல்களை உள்ளீடு செய்வதில் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஆபத்தை முன் உணர வேண்டும் என்கிறார்கள் காவல்துறையினர்.

குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் இந்த வழக்கு இன்னும் விசாரணையில் இருப்பதாகத் தகவல்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com