சேலம் உருக்காலை
சேலம் உருக்காலை

சேலம் உருக்காலை பங்குகள் விற்பனை: மத்திய அமைச்சர் விளக்கம்!

சேலம் உருக்காலை பங்குகள் விற்பனை தொடர்பாக மத்திய இரும்பு எஃகு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மாநிலங்களவையில் நேற்று விளக்கம் அளித்தார். 

திமுக எம்.பி வில்சன் மாநிலங்களவையில், ”சேலம் உருக்காலையின் பங்குகளை விற்கும் நடவடிக்கைகள் நடைபெற்றுவரும் நிலையில் அந்த ஆலையின் தற்போதைய நிலை என்ன?’’ என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து, மத்திய இரும்பு எஃகு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேசியதாவது:

சேலம் உருக்காலையின் பங்குகளை விற்பனை செய்ய வேண்டும் என்கிற முடிவில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. மத்திய நிதி அமைச்சகமும் எமது அமைச்சகமும் இணைந்து அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. சேலம் உருக்காலையின் பங்குகளை விற்பதற்கான ஏலம்  தொடர்பான நடவடிக்கைகள் வரும் ஜனவரி மாதம்  நடைபெறும் என நம்புகிறேன்.

-இவ்வாறு ஜோதிராதித்ய சிந்தியா கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com