உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய் வசூல்!  ஷாருக்கான் நடித்த 'பதான்' திரைப்படம் சாதனை!

உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய் வசூல்! ஷாருக்கான் நடித்த 'பதான்' திரைப்படம் சாதனை!

ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான “பதான்” திரைப்படம் 27 நாட்களில் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

நடிகர் ஷாருக்கான் நடித்த 'பதான்' திரைப்படம் கடந்த மாதம் 25-ந் தேதி வெளியானது. இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளிவந்தது. இந்தி சினிமா வரலாற்றில் இமாலய சாதனையாக ஷாருக்கானின் பதான் படம் ரூ.1000 கோடி வசூலை குவித்து உள்ளது.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரஹாம் நடிப்பில் வெளியாகி இருக்கும் பதான் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. சுமார் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ள பதான் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி இந்த சாதனையினை படைத்தது எனலாம்.

பெரும்பாலான ரசிகர்கள் மற்றும் திரை விமர்சகர்கள் இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனத்தையே கொடுத்துள்ளனர். முழுக்க முழுக்க ஆக்சன் திரில்லர் படமாக வெளியாகியிருக்கும் இந்தப் படத்தில் ஜான் ஆபிரஹாம் வில்லனாக நடித்துள்ளார். பாலிவுட் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் சிறப்பு தோற்றத்தில் ஷாருக்கானுடன் இணைந்து சல்மான்கான் நடித்துள்ளார்.

பதான் திரைப்படம் முன்பதிவிலும் மாஸ் காட்டி இருந்தது. பாலிவுட்டில் ரிலீசுக்கு முன் அதிகம் முன்பதிவான படங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது பதான். இப்படத்தின் ரிலீசுக்கு முன்னரே 5.2 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துள்ளன.இந்த படத்தில் ஷாருக்கான்- தீபிகா படுகோன் காவி உடையில் கவர்ச்சி நடனமாடியது படம் வெளியாவதற்கு முன்பே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, அந்த சர்ச்சையை கடந்து வசூலில் இமாலய சாதனை படைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.106 கோடி வசூல் அள்ளிய இந்தப் படம் அடுத்தடுத்த நாட்களிலும் வசூலில் முன்னேற்றத்தைக் கண்டது. 4 நாட்களில் ரூ. 400 கோடிக்கு மேல் வசூல் குவித்திருந்த படம் 8 நாட்கள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 667 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று பதான் திரைப்படமானது வெளியாகி 27 நாட்களை கடந்த நிலையில் உலக அளவில் 1000 கோடி ரூபாயை வசூலித்துள்ளததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com