ஷாருக்கானின் நீல நிற கடிகாரத்தின் விலை ரூ.4.9 கோடி...

ஷாருக்கானின் நீல நிற கடிகாரத்தின் விலை ரூ.4.9 கோடி...

பாலிவுட் உலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான் நடித்துள்ள படம் ‘பதான்’. தீபிகா படுகோனே கதாநாயாகி, இந்த படம் கடந்த மாதம் 25 ஆம் தேதி திரைக்கு வந்து வெற்றிகரமாக வசூல் வேட்டை நடத்திக்கொண்டிருக்கிறது. படம் திரைக்கு வந்து 12 நாளில் 850 கோடிக்கும் அதிகமாக வசூலை வாரி குவித்துள்ளது.

முன்னதாக இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல் கடந்த டிசம்பரில் வெளியாகி கடும் சர்ச்சையை கிளப்பியது. பேஷாராம் ரங் பாடல் காட்சியில் தீபிகா படுகோனே காவி நிற உடையில் காணப்படுகிறார். இந்துக்களின் புனித நிறமாக கருதப்படும் காவி நிறத்திலான ஆடை அணிந்து கொண்டு ஷாருக்கானுடன் படு கவர்ச்சியாகவும் நெருக்கமாகவும் தீபிகா படுகோனே ஆடியிருப்பதாக கூறி இந்து அமைப்புகள் விமர்சித்தன. இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் உள்ளது என்றும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் எனவும் மிரட்டல் விடுக்கும் வகையில் சில தலைவர்கள் பேசினர்.

இப்படி பல பிரச்னைகளை சந்தித்து, அதையெல்லாம் தாண்டி வெளியாகி இன்று 850 கோடிக்கும் மேல் வசூல் குவித்துள்ளது ‘பதான்‘ திரைப்படம்.

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார்களாக விளங்குபவர்கள் எல்லாரும் தனக்கென ஒரு ஸ்டைல் வைத்துள்ளனர். தமிழுக்கு எப்படி ரஜினிகாந்தோ அப்படி ஹிந்தி சினிமாவுக்கு ஷாருக் கான். எவ்வளவு வயதானாலும் துடிப்பு குறையாமல், இளைஞர்களுக்கே சவால் விட்டு கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ‘பதான்‘ பட விழாவில் அவர் அணிந்திருந்த கடிகாரம் நெட்டிசன்களிடையே ஒரு பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. அதற்கு காரணம் அதன் விலைதான்.

பதான் விழாவிற்கு முன்னதாக எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை நடிகை தீபிகா படுகோன் தற்போது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர்கள் தினசரி காலை செய்யும் தோல் பராமரிப்பு பற்றி பேசுகின்றனர். வீடியோவில், ஷாருக் ஒரு வெள்ளை டி- சட்டை மற்றும் நீல நிற கைக்கடிகாரம் அணிந்திருப்பதை பார்க்க முடிந்தது. அந்த நீல நிற கடிகாரம் நெட்டிசன்கள் மற்றும் அவரது ரசிகர்கள் பலரின் கவனத்தை ஈர்த்தது. ஷாருக் கான் அணிந்த வாட்ச் என்றால் அதை யார் தான் கவனிக்க மாட்டார்கள்? அந்த வாட்ச் குறித்து இணையம் முழுக்க தேடுதல் வேட்டை தொடங்க, ஒரு சிலர் பேஷன் பிளாக்கர் டயட் சப்யாவிடம் இது குறித்து கேட்டுள்ளனர். அதற்கு அவர் அளித்த பதிலில் தான் ரசிகர்கள் அனைவரும் உறைந்துவிட்டனர்.

அந்த கடிகாரம் ஆடெமர்ஸ் பிகுவெட்டிடம் இருந்து வந்தது என்று அவர் பதில் அளித்திருந்தார். டயட் சப்யா பகிர்ந்த ஸ்கிரீன்ஷாட்டின்படி, ராயல் ஓக் பெர்பெச்சுவல் காலண்டர் வாட்ச், ₹4.98 கோடி மதிப்புடையது. இணையதளம் Chrono24 இன் படி, இந்த மாடல் கடிகாரங்கள் ₹4.7 கோடிக்கு விற்கப்படுகிறது. கிட்டத்தட்ட 5 கோடிக்கு ஒரு கைக்கடிகாரமா? என ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர்.

அதற்காக இணையத்தை அலசும்போது இது நீல நிற செராமிக் பொருளால் செய்யப்படுவதும், நேரம் காட்டும் முட்கள் வெள்ளை தங்கத்தை வைத்து செய்யப்படுவதும் தெரிந்தது. நேரத்தோடு மாதம் , நாள், தேதி குறிப்பிடும் சப் டயல்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஷாருக்கானின் ஆடம்பர வீட்டின் மதிப்பு 200 கோடி, பிஎம்டபிள்யூ 6 சீரிஸ், ஆடி மற்றும் பிற கார்களையும் வைத்துள்ளார். அந்த வரிசையில் ₹4.98 கோடி மதிப்புள்ள இந்த கடிகாரமும் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com