சிவசேனா கட்சி சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கம்!

Eknath Shinde-Uddhav Thackeray
Eknath Shinde-Uddhav Thackeray

காரஷ்டிராவில் சிவசேனா கட்சியில் தற்போது முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியும், முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியுமாக இரு பிரிவுகளாக உள்ள நிலையில் அக்கட்சியின் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது.

-இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில், தெரிவித்ததாவது;

மகாரஷ்டிராவில் அடுத்த மாதம் நடைபெறும் இடைத்தேர்தலில் சிவசேனா கட்சியின் ‘வில் அம்பு’ சின்னத்தை பயன்படுத்த அக்கட்சியின் இரு பிரிவுகளுக்கும் அனுமதி இல்லை. இந்த இரு தரப்புக்கும் வேறு தனிச் சின்னங்கள் ஒதுக்கப்படும். சிவசேனாவின் உட்கட்சிப்  பிரச்சனை தீரும் வரையில் இதே நிலை தொடரும். அதுவரை சிவசேனாவின் கட்சிச் சின்னம் முடக்கப் படுகிறது.  

-இவ்வாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் சிவசேனாவின் இரு பிரிவுகளும் தங்களின் விருப்பச் சின்னத்தை இன்று மாலைக்குள் தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com