காட்பரியின் சட்டப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகு ஹெல்த் ட்ரிங்க் குறித்த இடுகையை நீக்கினார் சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர்!

காட்பரியின் சட்டப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகு ஹெல்த் ட்ரிங்க் குறித்த இடுகையை நீக்கினார் சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர்!

Cadbury இன் சட்டப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகு சோசியல் மீடியா Influencer ஒருவர், Bournvita என்ற ஹெல்த் டிரிங்க் குறித்த தனது எதிர்மறை இடுகையை நீக்கினார்.

நீக்கப்பட்ட அந்தப் பதிவு இன்ஸ்டாகிராமில் 12 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளது.

ரேவந்த் ஹிமத்சிங் எனும் சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர் ஒருவர் காட்பரி தயாரிப்புகளில் ஒன்றான போர்ன்விட்டா குறித்து சோசியல் மீடியாவில் எதிர்மறை பிரச்சாரம் தொனிக்க இடுகை ஒன்றைப் பதிவு செய்தார். அதில் போர்ன்விட்டா கவரில் உள்ள பேக்கேஜ் லிஸ்ட்டில் அவர்கள் குறிப்பிட்டுள்ள ஊட்டச்சத்துக்கள் எல்லாம் அதில் இருக்கின்றனவா? அல்லது பாதிக்குப்பாதி சர்க்கரை மட்டுமே சேர்த்து பொய்யாக மக்களை ஏமாற்றுகிறார்களா? நிறுவனங்கள் தங்கள் பேக்கேஜில் அப்பட்டமாக பொய் சொல்ல அரசாங்கம் அனுமதிக்க வேண்டுமா? பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இளம் வயதிலேயே சர்க்கரைக்கு அடிமையாக்குகிறார்கள், மேலும் குழந்தைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சர்க்கரைக்கு ஏங்குகிறார்கள்," என்று ஹிமத்சிங்கா எழுதினார். Twitter மற்றும் LinkedIn போன்ற தளங்களில் அந்த இடுகை பரவலாகப் பகிரப்பட்டது.

கிட்டத்தட்ட போர்ன்விட்டாவின் நம்பகத் தன்மைக்கு விடுக்கப்பட்ட அறைகூவலைப் போலிருந்த அந்த இடுமை காட்பரி நிறுவனத்தை வம்புக்கு இழுத்தது. உடனே சட்டப்பூர்வ நடவடிக்கையில் இறங்கியது காட்பரி.

Cadbury Bournvita, 9 ஏப்ரல் 2023 அன்று, அவர்களின் சமூக ஊடக தளத்தில் தயாரிப்பு பற்றிய விளக்கத்தை வெளியிட்டது. "போர்ன்விடாவில் வைட்டமின் ஏ, சி, டி, இரும்பு, துத்தநாகம், தாமிரம் மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகின்றன. இவை பல ஆண்டுகளாக எங்களின் தயாரிப்பின் ஒரு பகுதியாகும். நாங்கள் எப்போதும் "ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு உதவுக்கூடிய வகையிலேயே எங்கள் தயாரிப்புகளை உருவாக்குகிறோம். கோவிட் நோய்த் தொற்றுக்கு முன்பிருந்தே இது தான் எங்களது ஆரோக்ய நடவடிக்கையாக இருந்து வருகிறது."

- என்று காட்பரி தெரிவித்திருந்தது.

ரேவந்தின் இடுகை வைரலானதைத் தொடர்ந்து காட்பரி அந்த இடுகை மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவிருப்பதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து ரேவந்த், சர்ச்சைக்குரிய அந்த இடுகையை சோசியல் மீடியாவில் தான் பகிர்ந்திருந்த அத்தனை பக்கங்களில் இருந்தும் நீக்கினார்.

நீக்கப்பட்ட இடுகை இன்ஸ்டாகிராமில் 12 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்தது மற்றும் சமூக ஊடக தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. பின்னர் அதை நடிகர்-அரசியல்வாதி பரேஷ் ராவல், முன்னாள் கிரிக்கெட் வீரரும் எம்பியுமான கிர்த்தி ஆசாத் ஆகியோரும் பகிர்ந்து கொண்டனர்.

காட்பரியின் சட்டப்பூர்வ அறிக்கையைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை, ரேவந்த் ஹிமத்சிங்கா போர்ன்விடாவிடம் மன்னிப்பு கேட்டார். அதைத் தொடர்ந்து அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு அறிக்கையையும் வெளியிட்டார், "ஏப்ரல் 13 அன்று இந்தியாவின் மிகப்பெரிய சட்ட நிறுவனங்களில் ஒன்றின் சட்ட அறிவிப்பைப் பெற்ற பிறகு (போர்ன்விடா) வீடியோவை அகற்ற முடிவு செய்துள்ளேன். வீடியோவை உருவாக்கியதற்காக காட்பரியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் திட்டமிட்டு அதைச் செய்யவே இல்லை. எந்தவொரு வர்த்தக முத்திரையையும் மீறுவதற்கோ அல்லது எந்தவொரு நிறுவனத்தை அவதூறு செய்யவோ அல்லது எந்தவொரு நீதிமன்ற வழக்குகளிலும் பங்கேற்கவோ எனக்கு ஆர்வமோ அல்லது ஆதாரமோ இல்லை எனவே இந்த விஷயத்தில் மேற்கொண்டு சட்டப்பூர்வமான ஆக்ஷனில் இறங்க வேண்டாம் என MNC களை கேட்டுக் கொள்கிறேன் என்று கோரியிருந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com