தண்ணீரில் நடந்த அதிசயப் பெண்மணி... வெள்ளம்போல் தரிசிக்க கூடிய மக்கள்!
ஆற்றில் வெள்ளம் போய்க்கொண்டிருக்க, அதன்மேல் நடந்து சென்ற அதிசயப் பெண்ணை தரிசிக்கக் கூடிய மக்களின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேசத்தின் போபாலில், செல்லும் நர்மதா ஆற்றைக் கடந்தபடி, சில தினங்களுக்ககு முன் ஒரு பெண் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த வீடியோவைக் கண்ட பொதுமக்கள் பலரும், அவரை தெய்வ வடிவம் என அதிசயமாகக் கருதி அவரைக் காண அங்கு கூடினர்.
அதேசமயம், அந்த மூதாட்டி, நர்மதா தேவியின் வடிவம் என கூறப்பட்டு, அந்த வீடியோவும் விளம்பரப்படுத்தப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் பலரும் அவரது தரிசனம் கிடைக்காதா என ஏங்கி அங்கு கூடுவதோடு, அவரது வீட்டிற்கு வந்தும் மூதாட்டியின் தரிசனம் பெற அலைமோதினர்.
இந்நிலையில், இதுகுறித்து போலீசார் விரைந்து நடத்திய விசாரணையில், இவரது பெயர் ஜோதி ரகுவன்ஷி என கண்டுபிடிக்கப்பட்டதோடு, இவர் கடந்த 10 மாதங்களுககு முன்பே வீட்டைவிட்டு கிளம்பிய நிலையில், இங்கே நர்மதாபுரம் அருகே வசிப்பதாகவும் தெரிவித்தார். இவர் அடிக்கடி நர்மதா நதியைச் சுற்றி நடப்பதன் மூலம், இவரை ஒரு அதிசய பெண் எனவும் மக்கள் தெய்வமாக பார்த்தனர்.
இவர் தண்ணீரில் நடப்பதையோ, எந்தவொரு தெய்வத்தின் அடையாளமாக தான் இருப்பதை அவர் மறுத்தார்.
ஜோதி ரகுவன்ஷி, நர்மதா நதியைச் சுற்றி நடப்பதனால், அவரை, ஒரு அதிசய பெண் என நம்பி மக்கள் அவரது தரிசனத்துககாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இதையடுத்து, போலீசாரின் விசாரணையைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, அவரை வீட்டிற்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.