ஏழைகளுக்கு உணவு தானியம் வழங்கும் திட்டம் தொடரும் !

ஏழைகளுக்கு உணவு தானியம் வழங்கும் திட்டம் தொடரும் !

உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு தானியங்களை மேலும் ஓராண்டுக்கு விநியோகிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

தற்போது உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மாதந்தோறும் ஒரு நபருக்கு 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. பருப்பு கிலோ ரூ.1, கோதுமை கிலோ ரூ.2, அரிசி கிலோ ரூ.3 –க்கும் வழங்கப்படுகிறது. அந்தியோதயா அன்ன யோஜனா திட்டப் பயனாளிகளுக்கு மாதம் 35 கிலோ உணவு தானியம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டதாக மத்திய பொது விநியோகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இதன் மூலம் நாட்டில் 81.35 கோடி மக்கள் பயனடைவார்கள். இந்த நடவடிக்கையால் அரசுக்கு ரூ. 2 லட்சம் கோடி கூடுதலாகச் செலவாகும். ஏழைகளுக்கு புத்தாண்டு பரிசாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காலத்தில் தொடங்கப்பட்ட பிரதமரின் இலவச உணவு தானியத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பிறகு நீட்டிக்கப்படாது. கொரோனா காலகட்டத்தில் மக்கள் நிதிநெருக்கடியில்

சிக்கி இருந்த்தால் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு கடந்த 28 மாதங்களாக மாதம் ஒன்றுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வந்தன. இப்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதால் இத்திட்டம் கைவிடப்படுகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com