பாடபுத்தகத்தில் மீண்டும் திப்பு சுல்தான்? கர்நாடக அமைச்சர் சூசகம்!

பாடபுத்தகத்தில் மீண்டும் திப்பு சுல்தான்? கர்நாடக அமைச்சர் சூசகம்!

கர்நாடக மாநில பாடபுத்தகங்களில் மீண்டும் திப்புசுல்தான் வரலாறு இடம்பெறும் என்று அந்த மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே சூசகமாக தெரிவித்தார்.

கடந்த ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் ரோஹித் சக்ரதீர்த்தா தலைமையிலான குழு பள்ளி பாட புத்தகங்களில் மைசூரின் பகுதிகளை ஆண்ட திப்பு சுல்தானின் வரலாறுகளை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக ஹெட்கேவரின் உரைகளை 10 வகுப்பு பாடபுத்தகங்களில் இடம்பெறச் செய்த்து.

இந்த நிலையில் தில்லியில் கர்நாடக அமைச்சர் பிரியங் கார்கே கூறுகையில், முந்தை ஆட்சியாளர்களில் பாட புத்தகங்களை திருத்தியமைப்பதாக கூறி சில குளறுபடிகளை செய்துவிட்டனர். திசைதிருப்பப்பட்ட வரலாறுகளை ஏன் மாணவர்கள் படிக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பிய அவர், பாடபுத்தகங்களில் வரலாறுகள்தான் இடம்பெற வேண்டும். குழந்தைகளுக்கு தேவையில்லாத விஷயங்கள் பள்ளி புத்தகங்களில் இடம்பெறக்கூடாது. இதில் காங்கிரஸ் அரசு தெளிவாக உள்ளது என்றார்.

கடந்த ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் பத்தாம் வகுப்பு பாட புத்தகங்களில் மைசூரை ஆண்ட திப்புவின் வரலாறு நீக்கப்பட்டு அதற்கு பதிலாக ஹெட்கேவரின் உரைகள் இடம்பெற்றன. அப்போது இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தும்கூட பொம்மை தலைமையிலான பா.ஜ.க. அரசு இதில் பிடிவாதமாக இருந்தது.

ஹிந்துத்துவா கொள்கைகளை திணிக்கும் பாடங்களை பள்ளி புத்தகத்தில் வைக்கக்கூடாது என்று பலரும் கோரிவந்தனர். இதனிடையே கடந்த வாரம் மூத்த கல்வியாளர் முனைவர் வி.பி.நிரஞ்சனாராத்யா, முதல்வர் சித்தராமையாவை சந்தித்து காவி கட்சியின் கொள்கைகள் பாடபுத்தகத்தில் இடம்பெறத் தேவையில்லை. முந்தைய அரசு பள்ளி பாடத்திட்டங்களை காவிமயமாக்கிவிட்டது. இதன் மூலம் அவர்கள் அம்பேத்கர், பசவண்ணா, குவெம்பு, திப்புசுல்தான் போன்றவர்களை அவமதித்துவிட்டனர்.

திப்பு சுல்தான் வரலாறை நீக்கி ஹெட்கேவர் உரையுடன்கூடிய பாடபுத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனினும் ஆட்சேபகரமான அந்த பாடத்தை குழந்தைகளுக்கு இந்த ஆண்டு சொல்லிக் கொடுக்கக்கூடாது. வரும் ஆண்டு பாடபுத்தகத்தை திருத்தி அமைத்து திப்பு சுல்தான் வரலாறு மீண்டும் இடம்பெறச் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com