கர்நாடகாவில் திப்பு சுல்தான் பாலிடிக்ஸ்

கர்நாடகாவில் திப்பு சுல்தான் பாலிடிக்ஸ்

ர்நாடகாவில் அடுத்த வருடம் சட்ட சபைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. அங்கே தேர்தல் என்றால் திப்பு சுல்தான் பற்றிய சர்ச்சை கிளம்புவது வாடிக்கைதான்!

சில மாதங்களுக்கு முன்பாக முன்னாள் காங்கிரஸ் முதலமைச்சரான சித்தராமையா, திப்பு சுல்தான் பிறந்த நாளைக் கொண்டாடினார். உடனே, பா.ஜ.க. தரப்பில், அவரை “ சித்தராமுல்லா கான்” என்று கூறி கிண்டல் செய்தார்கள்.

காங்கிரஸ்காரர்கள் சும்மா இருப்பார்களா?

கர்நாடகாவின் சட்ட மேலவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்  பி.கே.ஹரிபிரசாத், முன்னாள் பா.ஜ.க. முதலமைச்சரான யெதியூரப்பாவை “யூசுஃப் கான்” என்று குறிப்பிட்டார்.

உடனே, பா.ஜ.க.வினர் யெதியூரப்பாவை எப்படி யூசுஃப் கான் என்று சொல்லலாம்? என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு காங்கிரஸ் தரப்பில் ரெடியாக பதில் வைத்திருந்தார்கள். சில காலம் முன்பாக,யெதியூரப்பா தலையில் திப்பு சுல்தான் மாதிரியான ஒரு தலைப்பாகையும், இடுப்பில் ஒரு நீளமான கத்தியும் அணிந்துகொண்டு திப்பு சுல்தான் போல போஸ் கொடுக்க, அந்தப் படம் பத்திரிகைகளில் வெளியானது.

உடனே பா.ஜ.க. தரப்பு மௌனமாகிவிட்டது.

தேர்தலுக்குள் எப்படியும் மறுபடியும் திப்பு சுல்தான் தலைதூக்குவார் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com