திருநங்கைகளின் சலூன்!

திருநங்கைகளின் சலூன்!

மும்பை மாநகரில் முதன்முதலாக திருநங்கைகள் நடத்தும் சலூன் ஒன்று பிரபாதேவி பகுதியில் திறக்கப்பட்டுள்ளது. கின்னார் பிரிவினர் எனப்படும் இந்த திருநங்கைகள் 7 பேர் இணைந்து இதை நடத்தி வருகின்றனர். இதன் உரிமையாளர் சைனாப்பும் ஒரு திருநங்கையே. பெண்களுக்கு முடிவெட்டுதல் மற்றும் முகத்தை அழகுபடுத்துதல் உள்ளிட்டவை இங்கே மேற்கொள்ளப்படுகின்றன.

உரிமையாளர் சைனாப் தெரிவித்ததாவது: “திருநங்கைகள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். இந்தச் சலூன் இவர்கள் சுயமாக முன்னேற வழி வகுத்துள்ளது. வேலை வாய்ப்பை ஏற்படுத்த பயிற்சி அளிக்கப்படுகிறது. தகுதி பெற்ற திருநங்கைகளே இங்கே வேலை செய்கின்றனர். இந்தச் சலூன் திறக்க ரோட்டரி கிளப் மற்றும் Deutsche Bankஇம் உதவி செய்துள்ளன.

அந்தேரி (மேற்கு) பகுதியில், ‘The Trans café’ என்ற பெயரில் திருநங்கைகள் சிலர் சேர்ந்து நடத்தி வருகின்றனர் என்பது கூடுதல் செய்தி.

லட்சம் லட்சமாக வசூல்... எங்கே தெரியுமா...?

மும்பை மேற்கு ரெயில்வேயில் டிக்கெட் இல்லாமல் ரெயிலில் ஓசிப்பயணம் செய்பவர்களிடமிருந்து  ` 158.28 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டதில்,
2 டிக்கெட் பரிசோதகர்கள் (திரு கே.டி. ஓசா மற்றும் திரு சாகித் குரேஷி) தலா 1 கோடியை பயணிகளிடமிருந்து அபாரதமாக வசூலித்து அசத்தியுள்ளனர்.  

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2023 பிப்ரவரி மாதம் வரை 23.70 லட்சம் பேர் ரெயிலில் ஓசிப்பயணம் செய்ததில் ` 158.28 கோடி வசூலிக்கப்பட்டது. முந்தைய ஆண்டைவிட 68% அதிகம்.

மூன்றாவதாக மூத்த டிக்கெட் பரிசோதகர் திரு அஜ்மெர் சிங் அசத்தலாக செயல்பட்டு ` 93.47 லட்சத்தை அபாரதமாக வசூல் செய்துள்ளார்.

ஆண்கள் மட்டுமன்றி பெண் டிக்கெட் பரிசோதகர் களாகிய சாகில் திவாரி ` 54.70 லட்சத்தையும், கீதாபென் வசாவா ` 51.19 லட்சத்தையும் அபராதத் தொகையாக வசூல் செய்துள்ளனர்.

“டிக்கெட் பரிசோதகர்களுக்கு ஏமாற்றும் பயணிகளைக் கண்டறியம் திறமையுடன், ரயில்வே விதிமுறைகள் பற்றி நல்லஅறிவும், அபராதம் வசூலிக்கும் திறமையும் இருக்க வேண்டுமென” மேற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.

முதலை காட்சிக் கூடம் எங்கே?

சியாவிலேயே மிகப் பெரிய பறவைக் கூடத்தைக் கொண்ட மும்பை பைகுல்லா மிருகக்காட்சி சாலையில் 100க்கும் மேற்பட்ட பறவைகள்; 21 வகை இன பறவைகளுடன், கம்போஸ்ட் பெங்குவின் மற்றும் ராயல் பெங்கால் புலிகளும் உள்ளன.

இங்கே முதன்முறையாக நீருக்கடியில் முதலைகளைப் பார்க்கும் வசதி (முதலை காட்சிக்கூடம்) பைகுல்லா உயிரியல் பூங்காவின் நுழைவாயிலுக்கருகேயும் நீர்வாழ் பறவைக்கூடத்துக்கு அருகேயும் அமைக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

“ஆசியாவிலேயே முதன்முதலாக நீருக்கடியில் இருக்கும் முதலைகளை கண்ணாடி வழியாக அருகே இருந்து பார்க்கும் வகையில், 4200 சதுர மீட்டர் அளவில் முதலை காட்சிக் கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. பார்வையாளர் களுக்கு புதுமையான ஓர் அனுபவத்தை இது வழங்கும்.

தற்சமயம் 5 முதலைகள் மற்றும் 2 கரியல் வகை முதலைகள் உள்ளன. இவற்றுடன்  மேலும் 20 முதலைகளைத் தங்க வைக்க முடியும். சோலாப்பூர் உயிரியல் பூங்காவிலிருந்து 5 முதலைகளையும், ஒடிசாவிலுள்ள நந்தன்கனனில் இருந்து 5 முதலை களையும் சேர்க்கத் திட்டமிட்டு இருக்கிறோம்.

தண்ணீருக்கடியில் முதலைகள் நீந்துவதையும், மேல்தளத்துக்கு வருவதையும் பார்த்து ரசிக்க முடியும்.

அழகிய வண்ணங்கள் மற்றும் கலைநயத்துடன் உருவாக்கப்பட்டு வரும் இந்த முதலை காட்சிக்கூடத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்துவருகின்றன. வரும் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்துவைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளனர்.

(கோடை விடுமுறை மஜா!)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com