மத்திய பட்ஜெட்டும் அல்வாவும் .....!

அல்வா தயாரிக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: பட்ஜெட் தயாரிப்பு நிறைவு!
மத்திய பட்ஜெட்டும் அல்வாவும் .....!

மத்திய பட்ஜெட், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மத்திய நிதியமைச்சகத்தால் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. வழக்கமாக யார் பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறாரோ அவர் தான் இந்த அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சியைத் துவங்குவார். இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சியைத் துவங்கி வைத்தார். டெல்லியில் உள்ள நிதி அமைச்சகத்தின் தலைமையகத்தில் சக ஊழியர்களுக்கும், பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் இந்த அல்வா பகிரப்பட்டது.

பிப்ரவரி 1ஆம் தேதி, 2023-24ம் நிதியாண்டிற்கான முழு நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். தற்போது மத்திய பட்ஜெட் தாக்கலுக்குமுன் நடத்தப்படும் அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. பட்ஜெட் அச்சடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் "லாக்-இன்" செயல்முறையைத் துவங்குவதற்கு முன்பு, ஒவ்வொரு வருடமும் நிதியமைச்சகத்தால் நடத்தப்படும் அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி குடியரசு நாளான நேற்று நடத்தப்பட்டு உள்ளது.

அதனை முன்னிட்டு இன்று நாடாளுமன்ற நார்த் ப்ளாக் பகுதியில், அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இன்று நடந்த அல்வா நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன், நிதி அமைச்சகத்தைச் சேர்ந்த பங்கஜ் சவுதிரி, பகவத் கிஷன்ராவ், நேரடி வரி துறை மற்றும் CBIC பிரிவின் தலைவர்கள் மற்றும் இதர நிதியமைச்சகம் மற்றும் பட்ஜெட் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மத்திய நிதி ஆயோக் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுடன் கலந்தாலோசித்து நிதியமச்சகம் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தயாரித்துள்ளது. இந்த ஆண்டு, பட்ஜெட் தொடர்பான தகவல்களை பொதுமக்கள், யூனியன் பட்ஜெட் மொபைல் ஆப் (Union Budget Mobile App) என்ற செல்போன் செயலி மூலம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அல்வா தயாரித்து, நிதியமைச்சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கினார்.

பட்ஜெட் தயாரிப்புக் குழுவில் இருந்தவர்கள் டிவி சோமநாதன் இவர் மத்திய நிதி மற்றும் செலவின துறை செயலாளர், சஞ்சய் மல்ஹோத்ரா இவர் மத்திய வருவாய்த்துறை செயலாளர் ஆவார், அனந்த நாகேஸ்வரன் இவர் மத்திய அரசின் லைமை பொருளாதார ஆலோசகர் ஆவார், துஹின் காந்தா பாண்டே இவர் மத்திய முதலீட்டுத் மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை (DIPAM) துறையின் செயலாளர் ஆவார், அஜய் சேத் இவர் பொருளாதார விவகாரங்கள் துறையின் செயலாளர் ஆவார், விவேக் ஜோஷி இவர் நிதி சேவைகள் துறையின் செயலாளர் ஆவார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com