வாட்ஸ் அப் ஸ்பாம் மெசேஜ் - படித்தவுடன் நீக்கிவிட்டால் போதுமா?

வாட்ஸ் அப் ஸ்பாம் மெசேஜ் - படித்தவுடன் நீக்கிவிட்டால் போதுமா?

வாட்ஸ் அப் இல்லாத மொபைல், இந்தியாவில் அபூர்வம். வாட்ஸ் அப் ஒரு முக்கியமான தொலைதொடர்பு சாதனமாக மாறிப்போய் பத்தாண்டுகள் ஆகப்போகின்றன. இலவச சேவை, பயன்படுத்துவதற்கும் எளிதானது என்பதால் இந்தியாவின் வெகு பிரபலமான ஆண்ட்ராய்டு ஆப் ஆக வாட்ஸ் அப் தொடர்ந்து இருந்து வருகிறது.

உலகிலேயே வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களில் 30 சதவீதம் பேர் இந்தியர்கள் என்கிறார்கள். இந்தியாவில் மட்டும் 41 கோடி வாட்ஸ் அப் கணக்குகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இன்றைய நிலையில் அரசுகளின் அன்றாட நடவடிக்கைகள் மட்டுமல்ல அரசாங்க ரகசியங்கள் கூட வாட்ஸ் அப் வழியாகவே பரிமாறப்படுகின்றன. இந்நிலையில் வாட்ஸ் அப் தகவல்களை திருடுவதும், தவறான தகவல்களை பரப்புவதும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

ஸ்பாம் மெசேஜ் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. சமீபத்தில் எடுத்த ஆய்வில், வாட்ஸ் அப் மூலமாக தேவையில்லாத செய்திகள் மட்டுமே அதிகமாக பரப்பப்படுகின்றன என்று தெரிய வந்திருக்கிறது. இதை கண்டுபிடிக்கத்தான் இத்தனை நாள் ஆனதா என்று இதையும் இணையவாசிகள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

ஆய்வின் படி 45 சதவீத வாட்ஸ்அப் பயனாளிகள், தங்களுக்கு வரும் செய்திகளில் தொல்லை தரக்கூடியவை நிறைய இருப்பதாக நினைக்கிறார்கள். தினமும் வரும் செய்திகளில் மார்கெட்டிங் செய்திகள், ரியல் எஸ்டேட். பேங்க் லோன், பார்ட் டைம் வேலை வாய்ப்புச் செய்திகள், சமையல் டிப்ஸ், ஹெல்த் டிப்ஸ் என ஏராளமானவை அடிக்கடி அனுப்பப்படுவதாக வருத்தப்படுகிறார்கள்.

வாட்ஸ்அப் பிஸினெஸ் கணக்குகளோடு தொடர்பு கொள்வதால் தங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களோ, தாங்கள் தேடிய பொருட்கள் சம்பந்தமான விளம்பரங்களோ உடனுக்குடன் வருவதாக தெரிவிக்கிறார்கள். குறிப்பாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிரும் பதிவுகளைப் பொறுத்து, அது தொடர்பான விளம்பரங்களோ, செய்திகளோ வருவதாக தெரிவித்திருக்கிறார்கள்.

2021 மே மாதம் வாட்ஸ்அப் நிறுவனம், தனி நபர் உரிமை சம்பந்தப்பட்ட கொள்கை முடிவை அறிவித்தது. வாட்ஸ் அப் பிஸினெஸ் கணக்குகளிடம் சமர்ப்பிக்கப்படும் செய்திகளை மார்க்கெட்டிங் விஷயங்களுக்கு குறிப்பாக பேஸ்புக், இன்ஸ்டா கிராம் பக்கங்களில் பயன்படுத்துவது குறித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் ஏதாவது விதி மீறல்கள் இருக்கிறதா என்பது குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும்.

73 சதவீத வாட்ஸ்அப் பயனாளிகள், ஸ்பாம் மெசெஜ் வந்தால் அதை நீக்குவதுடன் அனுப்பியவரையும் பிளாக் செய்துவிடுகிறார்கள். மற்றவர்கள் அதை படிப்பதோடு சரி. அது குறித்து புகார் அளிப்பதற்குக்கூட தயாராக இல்லை. இந்நிலையில் வாட்ஸ்அப் தொல்லைகளை தவிர்க்க, மத்திய தொலைத் தொடர்பு ஆணையம் தலையிட்டு வாட்ஸ் அப் நிறுவனத்திடம் விளக்கம் கேட்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com