யார் பப்பு? நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்!

மஹுவா மொய்த்ரா -  நிர்மலா சீதாராமன்
மஹுவா மொய்த்ரா - நிர்மலா சீதாராமன்

காங்கிரஸ் எம்.பி-யான ராகுல் காந்தியை ‘அரசியலில் பப்பு’ என பா.ஜ.க-வும், ‘அமித் ஷா-தான் இந்தியாவின் மிகப்பெரிய பப்பு’ என திரிணாமுல் காங்கிரஸும் விமர்சித்து வருகிறது.  இந்நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் யார் பப்பு என்று காரசார விவாதம் நடந்தது.

நேற்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, ``இந்த அரசாங்கமும் ஆளும் கட்சியும் பப்பு என்ற வார்த்தையை திறமையின்மையைக் குறிக்கவும், இழிவுபடுத்தவும் உபயோகிக்கிறார்கள். ஆனால் உண்மையான பப்பு யார் என்பதை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

நாட்டில் தொழில்துறை உற்பத்தி கடந்த 26 மாதங்களில் இல்லாத அளவுக்கு நான்கு சதவிகிதம் சரிந்திருக்கிறது. அந்நிய செலாவணி கையிருப்பு ஒரு வருடத்திற்குள் 72 மில்லியன் டாலர் குறைந்திருக்கிறது. இந்த அரசின் கீழ்  கடந்த 9 ஆண்டுகளில் சுமார் 12.5 லட்சம் பேர் இந்தியக் குடியுரிமையைத் துறந்திருக்கின்றனர். இப்போது யார் பப்பு?" என பா.ஜ.க-வை சாடியிருந்தார்.

இதையடுத்து மானியங்களுக்கான துணைக் கோரிக்கைகள் குறித்த விவாதத்தின்போது பேசிய நிர்மலா சீதாராமன், ``மாண்புமிகு உறுப்பினர் மஹுவா மொய்த்ரா யார் பப்பு, பப்பு எங்கே இருக்கிறார் எனக் கேள்வியெழுப்பியிருக்கிறார். அதற்கு அவர் தன் வீட்டின் கொல்லைப் புறத்தைப் பார்க்கவேண்டும். அப்போது பப்பு மேற்குவங்கத்தில் இருப்பதைக் கண்டுபிடிப்பார்’’ என்று பதிலடி கொடுத்தார்.

மஹுவா மொய்த்ரா மற்றும் நிர்மலா சீதாராமனின் இந்த பப்பு மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com