மக்கள் தொகை மட்டும் அடிப்படையாக கொண்டு நாட்டினுடைய பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது. ஒட்டுமொத்த நாட்டினுடைய உற்பத்தி மற்றும் விற்பனை திறனை கொண்டுதான் நாட்டினுடைய வளர்ச்சி அமையும் என்று கடன் தர நிர்ணய ஆய்வு நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது.
கடன் தர நிர்ணய ஆய்வு நிறுவனமான மூடிஸ் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இந்தியாவினுடைய தற்போதைய பொருளாதார நிலை வளர்ச்சி அடைந்து வருவதாக என்று கூறப்பட்டாலும் அவை முழுமையான பொருளாதார ஏற்றமாக இருக்க முடியாது. மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக இந்த ஏற்றம் தற்போது ஏற்பட்டிருக்கிறது. அதேநேரம் மக்கள் தொகை தொழிலாளர் பங்களிப்பை அதிகரிக்க செய்யுமே தவிர பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவாது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவினுடைய கற்றல் விளைவு தரம் பாகிஸ்தான், வங்கதேசத்தின் போன்ற நாடுகளில் நிலைக்கு சமமாகவே அமைந்திருப்பது வளர்ச்சியின்மையினுடைய அடையாளம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவினுடைய கல்வித்தரம், டிஜிட்டல் மயமாக்கல், செயற்கை நுண்ணறிவு ஆகியவை வேலை இழப்பை தவிர்க்க பயன்படும் தற்போதைய கருவிகள் மட்டுமே. மேலும் கால் சென்டர் நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் வேலையின்மையை அதிகம் கட்டுப்படுத்துகின்றன. இந்தியாவில் உழைக்கும் மக்களினுடைய எண்ணிக்கை வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கக்கூடும். ஆனால் இது வலிமையான பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்க முடியாது.
வலிமையான பொருளாதார அமைய கல்வித் தரம், வேலை உருவாக்கம், தொழில்துறை பெருக்கம், சுகாதாரத் துறை கட்டமைப்பு, விவசாயம் மற்றும் நாட்டின் உள்கட்டமைப்பு ஆகியவற்றை சேர்த்த ஒன்று.
அதே நேரம் இந்தியாவினுடைய கல்வித் தரவும் சீனாவுடன் ஒப்பிடும்போது மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாகவும், அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை மேலும் 40 சதவீதம் உயர்வு உயரும். இந்திய அரசு ஒட்டு மொத்த மக்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்தோடு இணைந்து வளர்ச்சிக்கான பாதையை திட்டமிட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.