
ஹமாஸ் குழுவினர் இஸ்ரேலைத் தாக்கியதிலிருந்தே, இஸ்ரேல் பாரபட்சம் பார்க்காமல் பாலஸ்தீனத்தை தாக்கி வருகிறது. இதில் பாலஸ்தீன அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய கோரத் தாக்குதலில் 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே கடந்த 20 நாளுக்கும் மேலாக போர் தீவிரமாக நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்த நிலங்களை மீட்பதற்காக ஹமாஸ் படையினர் திடீரென இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். தொடக்கத்தில் இந்த தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு எதிராக போர் செய்யத் தயாரானது. இதனால் காசா மீது இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதலால் குழந்தைகள் உட்பட 7000க்கும் அதிகமான மக்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் நாட்டு பிணையக் கதிகளை ஹமாஸ் குழுவினர் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது. அதில் 40 குழந்தைகளும் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர் என சர்ச்சையைக் கிளப்பிய இஸ்ரேல். ஆனால் அதற்கு மாறாக இஸ்ரேல் பிணைக் கைதிகளை கொஞ்சம் கொஞ்சமாக விடுதலை செய்து வருகிறது. எனவே இஸ்ரேலின் குற்றச்சாட்டு பொய்யானது என காலப்போக்கில் உறுதியானது.
இருப்பினும் மறுபுறம் காசா மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.
கடந்த வாரத்தில் காசாவில் உள்ள மருத்துவமனையில் இஸ்ரேல் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வு உலகையே உலுக்கியது. இவர்களின் இத்தகைய கொடூர நரவேட்டையை உடனடியாக நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.
காசாவை முழுமையாக கைப்பற்றுவதற்காக இஸ்ரேல் தரைவழி, வான்வழி என எல்லா தாக்குதல்களையும் தொடர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் அந்த இடத்தில் உயிர் பலிகள் அதிகரித்து வரும் நிலையில் வீடுகளை இழந்த பாலஸ்தீனியர்கள் பலர் அங்குள்ள அகதிகள் முகாமில் தங்கியுள்ளனர். ஆனால் இந்த அகதிகள் முகாமின் மீதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 200க்கும் அதிகமான நபர்கள் இறந்துள்ளனர். ஏராளமானோர் இதில் காயமடைந்து உயிருக்காக போராடி வருகின்றனர்.
மேலும் இடிப்பாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடந்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயிரும் என கூறப்படுகிறது.