ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் மரணம்!

Political Advisor Ravanan
Political Advisor Ravanan

இவர் சசிகலாவின் சித்தப்பா கருணாகரன் என்பவரின் மருமகன். கொங்கு மண்டலத்தை சேர்ந்த பல்வேறு முக்கிய தலைவர்களை அதிமுக-வில் இணையச் செய்தவர். பின்னர் சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை கட்சியை விட்டு ஜெயலலிதா நீக்கிய போது ராவணனையும் நீக்கினார்.

அதன் பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கி திருச்சியில் அவரது மகனின் மருத்துவ உயர் படிப்புக்காக அவருடன் தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

அவரது உடல் அவரது சொந்த ஊரான மன்னார்குடி அருகே ராதா நரசிம்மபுரம் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று மாலை அவரது இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com