கோடக் வங்கி கணக்கு வைத்திருப்பவரா நீங்கள்..? அப்போ உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி..!

Kotak Mahindra Bank
Kotak Mahindra Bankimage credit-ndtvprofit.com
Published on

இந்தியாவில் தற்போது அனைத்து நலதிட்ட உதவிகளும், நிதி நடவடிக்கைகளும் வங்கிகளின் மூலமாகவே நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நாம் எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும், யாருக்காவது பணம் அனுப்பினால் நமக்கு மெசேஜ் வந்து விடும். அதேபோல் நமக்கு யாராவது பணம் அனுப்பினாலும், ஏடிஎம்மில் பணம் எடுத்தாலும் நமக்கு மெசேஜ் வந்து விடும். அதாவது நாம் எந்த பணப்பரிவர்த்தனை செய்தாலும் நமக்கு மெசேஜ் வந்து விடும்.

அந்த வகையில் நீங்க கோடக் மஹிந்திரா வங்கியில் (kotak mahindra bank) கணக்கு வைத்திருந்தால், இந்த செய்தி உங்களுக்கு தான். கோடக் மஹிந்திரா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்றை அறிவித்துள்ளது.

அதாவது, இனிமேல் ஒரு மாதத்திற்கு 30 SMS மட்டும் தான் இலவசம். அதற்கு மேல் வரும் பணப்பரிவர்த்தனைகளுக்கான ஒவ்வொரு SMSக்கும் 0.15 பைசா கட்டணம் செலுத்த வேண்டும் என்று கோடக் மஹிந்திரா வங்கி அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதுவும் இந்த உத்தரவு டிசம்பர் 1-ம்தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

சிலர் தினமும் அதிகளவு யூபிஐ பயன்படுத்துவதன் மூலமாக அதிகளவு SMS வரும். அப்படிபட்டவர்களுக்கு 30 SMS லிமிட் முடிந்த உடன் அதன் பிறகு வரும் ஒவ்வொரு SMSக்கு 0.15 பைசா கட்டணமாக செலுத்த வேண்டும் என்று கோடக் மஹிந்திரா வங்கி அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
இன்று முதல் இந்த வங்கி கணக்குகள் முடக்கப்படும் - ரிசர்வ் வங்கி எச்சரிக்கை..!
Kotak Mahindra Bank

UPI/NEFT/RTGS/IMPS பரிமாற்றங்கள், ATM பணம் எடுத்தல், பணப் பரிவர்த்தனைகள், காசோலை வைப்புத்தொகை, டெபிட் & கிரெடிட் கார்டு பயன்பாடு போன்றவை இதில் அடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமும் அதிகளவும் யூபிஐ மூலமாக பணப்பரிவர்த்தனை செய்பவர்கள் வங்கியின் இந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதேசமயம், 30 SMS லிமிட்டுக்கு மேல ஒவ்வொரு SMSக்கு 0.15 பைசா கட்டணமாக செலுத்த வேண்டுமே என்று கவலைப்படும் வாடிக்கையாளர்களுக்கு மூன்று சூப்பரான அறிவிப்பும் கொடுத்திருக்காங்க. அதாவது,

* இந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் உங்கள் வங்கி கணக்கின் இருப்பு தொகையை ரூ.10,000 வரை maintain செய்தால் இந்த கட்டணம் வசூலிக்கப்படாது.

* வங்கியில் 811 கணக்கு வைத்துள்ளவர்கள் combined balance இருப்பு தொகையை ரூ.5000 வரை maintain செய்பவர்களுக்கும் இந்த கட்டணம் வசூலிக்கப்படாது.

* சம்பள கணக்கு வைத்துள்ளவர்கள் மாதாமாதம் தவறாமல் சம்பளம் வருபவர்களுக்கும் இந்த extra charges வசூலிக்கப்படாது என்று கூறியுள்ளது.

2003-ல் தொடங்கப்பட்ட கோடக் மஹிந்திராவங்கி, மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்தியத் தனியார் வங்கியாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com