தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து சைபர் குற்றம் புரிவோர், வெளிநாட்டில் வேலை தேடும் இளைஞர்களை குறிவைத்து டூரிஸ்ட் விசா மூலம் வெளிநாட்டிற்கு அனுப்பி அவர்களுடைய அடையாள ஆவணங்களை வைத்துக் சைபர் குற்றத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர். இதனால் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக புதிய முகவர்கள் தொடர்பு கொண்டால், அவர்களுடைய இணைதள முகவரியை emigrate.gov.in என்கிற இணையதளம் மூலம் உண்மையானது தானா என சரிபார்க்குமாறு தமிழக சைபர் குற்றத்தடுப்பு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். முகவர்கள் போலி என தெரிய வந்தால், உடனடியாக 1930 என்கிற எண்ணுக்கு புகார் அளிக்கவும் என கூறியுள்ளனர்.
ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக சமூகவலைத்தள முகப்பு பக்க படத்தில் (profile) தேசியக் கொடியை இடம்பெறச் செய்யுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசியக் கொடியுடன் செல்ஃபி எடுத்து சமூகவலைத் தளத்தில் பதிவிடவும் அறிவுறுத்தியுள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை பகுதிகளில் 10 நாட்களுக்கு முன்பு நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், இன்று வயநாடு மாவட்டம் நென்மேனி பகுதியில் திடீரென நில அதிர்வை உணர்ந்ததாக மக்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து நென்மேனி பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
1996 ஆம் ஆண்டு வெளிவந்த 'இந்தியன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'இந்தியன் 2' திரைப்படம் ஜூலை 12 திரையரங்குகளில் வெளியான நிலையில், இன்று OTT தளத்தில் வெளியானது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் 100 பதக்கங்களை வென்ற முதல் நாடு என்ற பெருமையை பெற்று முதலிடத்தில் உள்ளது அமெரிக்கா. இதுவரை 30 தங்கம், 38 வெள்ளி மற்றும் 35 வெண்கலம் என 103 பதக்கங்களை பெற்று அசத்தியுள்ளது.