ஜப்பானில் மக்கள் தொகை குறைந்து வருவதால், அதனை சரிசெய்ய ஜப்பான் அரசு புது புது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே டேட்டிங் செயலி, குழந்தை பெறுவோருக்கு நிதி போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், தற்போது டோக்கியோவில் இருந்து திருமணத்திற்காக கிராமங்களுக்கு குடியேறும் இளம் பெண்களின் போக்குவரத்து மற்றும் திருமண செலவுகளை ஜப்பான் அரசே ஏற்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஹூருன் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் (₹10.14 லட்சம் கோடி) முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார் (₹11.61 லட்சம் கோடி) கவுதம் அதானி. 3-வது இடத்தில் ₹3.14 லட்சம் கோடியுடன் HCL நிறுவனர் ஷிவ் உள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆதார் அட்டை காண்பித்தால் மட்டுமே லட்டு பிரசாதம் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கூடுதல் லட்டு பெற, வழக்கம்போல் ₹50 செலுத்த வேண்டும்.
இடைத்தரகர்கள் மூலம் அதிக விலைக்கு லட்டு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
உலக நாடுகளில் குரங்கு அம்மை பரவல் அதிகரித்து வருவதால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது சண்டிபுரா வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்க துவங்கி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
"ஈ, கொசு மற்றும் உண்ணிகளிடம் இருந்து மனிதர்களுக்கு இந்த தொற்று பரவுகிறது. இந்தியாவில் 63 பேருக்கு சண்டிபுரா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பாதித்தால் காய்ச்சல், வாந்தி, நரம்பியல் குறைபாடுகள், மூளைக்காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும். பெரும்பாலும் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்" எனவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெய்யழகன்’ திரைப்படத்தின் இசை வரும் ஆகஸ்ட் 31- ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்த திரைப்படம் செப்டம்பர் 27-ம் தேதி வெளியாக உள்ளது.