உதயநிதிக்கு அமைச்சரவையில் 10 வது இடம்! திமுக இலக்கிய அணி சார்பில் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு!

udhayanidhi stalin
udhayanidhi stalin

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இலக்கிய அணி நிர்வாகிகளின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக இலக்கிய அணிச் செயலாளர் வி.பி.கலைராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

udhayanidhi
udhayanidhi

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அத்துடன் ஊரக கடன்கள், வறுமை ஒழிப்பு மற்றும் முதலமைச்சர் வசம் இருந்த சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து உதயநிதிக்கு அமைச்சரவையில் 10 வது இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் வாரிசு அரசியல் போன்று தன் மீது வைக்கப்படுகிற பலவிதமான விமர்சனங்களுக்கு எல்லாம் தனது செயல்பாடுகள் மூலமாக பதிலளிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் 35 பேர் கொண்ட அமைச்சர்கள் வரிசையில் 10 வது இடம் உதயநிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. உதயநிதிக்கு அடுத்து அமைச்சர் ரகுபதி 11வது இடத்தில் இடம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது..

முதல் இடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.

அவருக்கு அடுத்தடுத்த இடங்களில் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு போன்ற மூத்த அமைச்சர் பெருமக்கள் உள்ளனர்.

இதன்மூலம் சட்டமன்றத்தில் முன் வரிசைக்கு வருகிறார் உதயநிதி. அத்துடன், பல்வேறு விவாதங்களில் கலந்துகொண்டு பேசும் வாய்ப்பும், பதிலளிக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com