சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் ஒரு பெண் உட்பட புதுமுகங்கள் 9 பேருக்கு அமைச்சர் பதவி!

சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் ஒரு பெண் உட்பட புதுமுகங்கள் 9 பேருக்கு அமைச்சர் பதவி!

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றிப்பெற்ற காங்கிரஸ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அமைச்சரவை விரிவாக்கம் செய்தது. இந்நிலையில் இன்று அமைச்சர்களுக்கான துறைகளை ஒதுக்கீடு செய்யப்பட்டு பதவியேற்பு நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.

கர்நாடகாவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 134 இடங்களில் மகத்தான வெற்றிபெற்று தனிபெருபான்மையுடன் ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 10 பெண்கள் மட்டுமே சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றனர். இதனால் கர்நாடக சட்டமன்றத்தில் பெண் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 4 சதவீதமாக உள்ளது.

காங்கிரஸின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு பெண் எம்எல்ஏக்களில், காங்கிரஸ் கட்சியில் மூத்தஅரசியல் தலைவராக பார்க்கப்படும் லட்சுமி ஹெப்பால்கர் சுயேச்சையாக வெற்றிபெற்று பின்னர் காங்கிரஸில் இணைந்த லதா மல்லிகார்ஜுனா, ஹிஜாப் தடைக்கு எதிராக கடுமையான போராட்டங்களை முன்னெடுத்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கனிஸ் பாத்திமா, பட்டியல் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நயனா மோட்டம்மா மற்றும் கோலார் தங்கவயல் தொகுதியில் வெற்றிபெற்ற எம்.ரூபகலாவும் ஆகியோரில் யாருக்காவது ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சரவை பெயர் பட்டியல் வெளியிடப்பட்டபோது பெண் எம்எல்ஏக்களின் பெயர்கள் அமைச்சரவை பட்டியலில் இடம்பெறாதது பெண் அரசியல்வாதிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டு பதவியேற்றும் விழா விமர்சையாக நடைபெற்றது. அப்போது மூத்த அரசியல் தலைவராக பார்க்கப்படும் லட்சுமி ஹெப்பால்கருக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். பெல்காம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லட்சுமி ஹெப்பால்கர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரைவிட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று மகத்தான வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி முதலமைச்சராக உள்ள சித்தராமையாவின் கட்டுப்பாட்டின் கீழ், நிதித்துறை, தொழிலாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம், உளவுத்துறை, ஐடி,பிடி உள்கட்டமைப்பு மேம்பாடு, தகவல் தொடர்பு ஆகிய முக்கிய துறைகள் வருகின்றன.

அதேபோல் துணை முதல்வரும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவருமாக உள்ள டி.கே.சிவகுமாருக்கு நீர்பாசனம், பெங்களூர் நகர மேம்பாடு, பெங்களூர் நகர பிற குடிமை அமைப்புகள் போன்ற பட்ஜெட்டில் அதிகளவு நிதி ஒதுக்கப்படும் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மூத்த அமைச்சர் ஜி.பரமேஸ்வராவுக்கு காவல் துறையை கட்டுப்படுத்தும் உள்துறை, எச்.கே. பாட்டிலுக்கு சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரம் மற்றும் சுற்றுலாத்துறை ஒதுக்கப்படுள்ளது.

கே.எச். முனியப்பாவுக்கு உணவுத்துறை, கே.ஜே.ஜார்ஜ்க்கு மின்சாரத்துறை, ராமலிங்க ரெட்டிக்கு போக்குவரத்து துறை. எம்.பி.பாட்டிலுக்கு பெரிய, நடுத்தர தொழில்துறை, தினேஷ் குண்டுராவுக்கு சுகாதாரத்துறை, மஹா தேவப்பாவுக்கு சமூக நலத்துறை, சதீஷ் ஜார்கிஹோலிக்கு பொதுப்பணித்துறை, கிருஷ்ணா பைரெகவுடாவுக்கு வருவாய்துறை, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கேவுக்கு நகர்புற வளர்ச்சி துறை, சிவானந்த் பாட்டிலுக்கு ஜவுளித்துறை, ஜமீர் அகமது காந்துக்கு வீட்டு வசதி மற்றும் சிறுபான்மை நலத்துறை, மது பங்காரப்பாவுக்கு தொடக்க மற்றும் மேல்நிலை கல்வித்துறை, ஷரனா பசப்பாவுக்கு சிறு, குறு தொழில்துறை, ஈஸ்வர் கண்ட்ரேவுக்கு வனத்துறை, செலுவராயசாமிக்கு வேளாண் துறை, ரஹீம் காந்துக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஹஜ் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com