அதிமுக பொதுக்குழு வழக்கு: டிசம்பர் 6ம் தேதிக்கு ஒத்தி வைப்பு!

Edapadi - panneer selvam
Edapadi - panneer selvam

அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பின் கோரிக்கைகளை நிராகரித்தது உச்ச நீதி மன்றம். அதன் விசாரணையை வரும் டிசம்பர் 6ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

அதிமுக பொதுக்குழு தொடர்பான சென்னை உயர் நீதி மன்றத்தின் உத்தரவுக்கு தடை கோரி ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

ADMK
ADMK

எடப்பாடி பழனிசாமி தரப்பில், வழக்கு விசாரணை தள்ளிப் போவதால் கட்சியின் செயல் பாடுகள் பாதிக்கப் படுவதாகவும், அந்த வழக்கினை அவசர வழக்காக கருதி புதன்கிழமை விசாரிக்க வேண்டும் என்றும் முறையிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட ஓ. பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், டிசம்பர் 6 ம் தேதி தன்னால் ஆஜராக முடியாது என்றும், விசாரணையை டிசம்பர் 13ம் தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

இரு தரப்பு வாதங்களையுமே கேட்ட நீதிபதிகள், உச்ச நீதி மன்ற அமர்வுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் வழக்கை புதன் கிழமை விசாரிக்க முடியாது என்றும், நீங்கள் கூறுவது போல் எங்களால் செயல்பட முடியாது எனவும் கூறினர். மேலும், இந்த வழக்கிற்கு டிசம்பர் 6 ம் தேதி விசாரணை நடைபெறும் என்றும் திட்ட வட்டமாக தெரிவித்தனர். வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான தடை நீடிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com