அமைச்சர் மகனுக்கு கல்தா: திமுக நடவடிக்கை!

அமைச்சர் மகனுக்கு கல்தா: திமுக நடவடிக்கை!

திமுக அமைச்சரவையில் பால் வளத்துறை அமைச்சராக இருப்பவர் ஆவடி சா.மு.நாசர். இவரது மகன் எஸ்.என். ஆசிம்ராஜா. இவர் ஆவடி மாநகர திமுக செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். அதோடு, ஆவடி மாநகராட்சியின் 4வது வார்டு கவுன்சிலராகவும், பணிக்குழுத் தலைவராகவும் இருந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் எஸ்.என். ஆசிம்ராஜாவை ஆவடி மாநகர திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி விட்டு, அவருக்கு பதில் சன்.பிரகாஷ் என்பவரை புதிய மாநகர திமுக செயலாளராக நியமித்து உத்தரவிட்டிருக்கிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன். எஸ்.என். ஆசிம்ராஜா ஆவடி மாநகராட்சியின் பணிக்குழுத் தலைவராக இருப்பதால், மாநகராட்சி பணிகளுக்கான ஒப்பந்த விவகாரத்தில் அவரது தலையீடு அதிகமாக இருப்பதாகவும், அவரை மீறி யாரும் எதுவும் செய்ய முடியவில்லை என்பதாலும், கட்சி நிர்வாகிகள் மத்தியில் இவர் மீது ஏகப்பட்ட அதிருப்தி இருப்பதாகவும் கட்சி தலைமைக்கு நிறைய புகார்கள் இவர் மீது வந்தன. அதன்பேரில் இந்தப் பதவி பறிப்பு நடவடிக்கை அவர் மீது எடுக்கப்பட்டுள்ளதாக திமுக சார்பில் சொல்லப்படுகிறது.

நேற்றைய தினம் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற புதுமைப் பெண் இரண்டாம்கட்ட திட்டத்தைத் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த சூழலில் மாவட்டப் பொறுப்பாளரான அமைச்சர் சா.மு. நாசரின் மகன் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருப்பது அக்கட்சியினரிடைய பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com