எம்.பி.பதவி பறிப்பை கற்பனையில் கூட எதிர்பார்க்கவில்லை: ராகுல்காந்தி!

எம்.பி.பதவி பறிப்பை கற்பனையில் கூட எதிர்பார்க்கவில்லை: ராகுல்காந்தி!

எம்.பி. பதவியிலிருந்து நான் தகுதி நீக்கம் செய்யப்படுவேன் என கற்பனையில் கூட நினைக்கவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா நாட்டிற்கு பத்து நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவருகிறார். இந்நிலையில், புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய ராகுல்காந்தி, “2004ம் ஆண்டு அரசியலுக்கு நுழைந்தபோது நான் கற்பனைச் செய்திருந்த இந்திய அரசியல் சூழ்நிலைக்கும் தற்போது என்னுடைய 20 ஆண்டுகால அரசியல் பயணத்தில் தற்போது நான் பார்க்கும் இந்திய அரசியலுக்கு நிறைய வித்தியாசம் உள்ளது. தற்போது நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலையில் நான் ஒருபோதும் கற்பனை செய்து பார்க்காத ஒன்று. நாட்டில் அவதூறு வழக்கிற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட முதல் நபர் நானாகதான் இருப்பேன் என நினைக்கிறேன், எம்.பி. பதவியிலிருந்து நான் தகுதி நீக்கம் செய்யப்படுவேன் என கற்பனையில் கூட நினைத்ததில்லை. ஆனால், நாடாளுமன்றத்தைவிட்டு வெளியேறியது என்னுடைய அரசியல் கற்றலுக்கான வாய்ப்பை வழங்கியுள்ளது” என்றார்.

முன்னதாக, நேற்றைய தினம் சான்ஸ்பிரான்ஸிஸ்கோவில் உள்ள இந்தியார்கள் மத்தியில் உரையாடிய ராகுல்காந்தி, பிரதமர் மோடி எல்லாம் தெரிந்தவர் போல் பேசுவார். அவர் கடவுளுக்கே பாடம் எடுப்பார் என கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். ராகுல்காந்தியின் இந்த பேச்சு பாஜக தலைவர் மத்தியில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com