ஈரோடு கிழக்கு தொகுதியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்! காங்கிரஸ் கட்சி அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்!  காங்கிரஸ் கட்சி அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காங்கிரஸ் கட்சி அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் களமிறங்கியுள்ளார். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட ஈவிகேஎஸ் இளங்கோவன் தேர்ந்தெடுக்கப்பட்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இடைத்தேர்தலில் பாஜகவும் களம் இறங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியது.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைதொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்த தொகுதியில் தமாகா வேட்பாளர் யுவராஜாவை எதிர்த்து நின்ற காங்கிரஸ் கட்சியை சார்ந்த திருமகன் ஈவெரா வெற்றி பெற்றிருந்தார். தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி வேட்பாளராக ஈவிகேஎஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் உள்ள தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்று அறிவித்திருந்தார்.

தந்தை பெரியாரின் பேரனும், சொல்லின் செல்வர் சம்பத்தின் மகனுமான ஈவிகேஎஸ் இளங்கோவன், 1948ம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தார். சென்னை மாநில கல்லூரியில் படிக்கும்போது மாணவரணி காங்கிரஸ் செயலாளராக இருந்த இவர், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர், நகர தலைவர், மாவட்ட தலைவர் என அடுத்தடுத்த பதவிகளை பெற்றவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். 2000-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸின் தலைவர் பதவியை ஈவிகேஎஸ் இளங்கோவன் வகித்தார். பின்னர், 2003-ம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராகவும், 2015 முதல் 2017 வரை மீண்டும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.

1984-ம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், 2004-ம் ஆண்டு கோபிசெட்டிபாளையம் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.தற்போது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்க பட்ட நிலையில் இவர் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com