குஜராத் சட்டப்பேரவை தேர்தல்
குஜராத் சட்டப்பேரவை தேர்தல்

குஜராத் சட்டப்பேரவை தேர்தல்; இன்று தேதி அறிவிப்பு!

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று நண்பகல் அறிவிக்கிறது.

குஜராத் சட்டமன்றத்தின் பதவிக்காலம் எதிர்வரும் பிப்ரவரி 18-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அங்கு பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் குஜராத் சட்டமன்றத் தேர்தல் தேதியை இன்று அறிவிப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

குஜராத்தில் சட்டபேரவையில் 182 உறுப்பினர்கள் உள்ளனர். இம்மாநிலத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பாஜக ஆளுங்கட்சியாக விளங்கி வருகிறது.

இப்போது நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என்று மும்முனை போட்டி நிலவுகிறது. ‘டெல்லி மாடல் அரசு’ போன்றூ குஜராத்திலும் உருவாக்குவோம் என்று ஆம் ஆத்மி பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

சில வாரங்களுக்கு முன்னர் இமாச்சலப் பிரதேசத்திற்கான தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானது.68 உறுப்பினர்களை கொண்ட இமாச்சல பிரதேச சட்டமன்றத்தின் பதவிக்காலம் எதிர்வரும் ஜனவரி 8-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. 

இந்நிலையில் இமாசல பிரதேசத்துக்கான சட்டமன்ற தேர்தல் நவம்பர் 12-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் ஏர்கனவே அறிவித்தது குறிப்பிடத் தக்கது. 

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com