தகுதி நீக்கத்தால் நான் அஞ்சப்போவதில்லை.. ராகுல் காந்தி ஆவேசம்!

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டணை விதித்தது. இதன் எதிரொலியாக ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

முதல் நாள் தீர்ப்பு வந்த நிலையில் மேல்முறையீட்டிற்கு கூட கால அவகாசம் கொடுக்காமல் இரண்டாவது நாளே ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டது அரசியல் விமர்சகர்களிடையே பெரும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியினர் நாடெங்கும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, “நாட்டில் ஜனநாயகம் தாக்கப்படுவது குறித்து நான் இதற்கு முன்னர் பலமுறை பேசி இருக்கிறேன். அதற்கான உதாரணங்களை தினமும் பார்த்து வருகிறோம். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் உள்ள நட்பை பற்றி நான் கேள்வி கேட்டிருந்தேன். லண்டனில் நான் பேசியது குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர்கள் தவறான தகவல்களை கொடுக்கிறார்கள். நான் கேள்வி கேட்பதை நிறுத்தப்போவதில்லை. தகுதி நீக்கத்தால் நான் அஞ்சப்போவதில்லை. அதானி விவகாரத்தை திசை திருப்பவே என்மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

 ராகுல் காந்தி
ராகுல் காந்தி

பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து நான் கேள்வி எழுப்பி இருந்தற்கு இன்று வரை அதற்கு பதில் வரவில்லை. நான் அடுத்து பேசப்போவதை நினைத்து பிரதமர் மோடி பயப்படுகிறார். பிரதமர் மோடியின் கண்ணில் நான் அச்சத்தை பார்த்தேன். நான் கைது செய்யப்பட்டாலும் உண்மையை தான் பேசுவேன். அதானி ஷெல் நிறுவனங்களுக்கு வந்த ரூ.20,000 கோடி பணம் யாருடையது என்பதை அவர்கள் விளக்க வேண்டும்” என தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com