ஏற்றமிகு ஏழு திட்டங்கள் தொடக்க  விழா! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கம்!

ஏற்றமிகு ஏழு திட்டங்கள் தொடக்க விழா! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கம்!

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் ஏற்றமிகு ஏழு திட்டங்கள் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்

தொடர்ந்து மேடையில் பேசிய அவர், “ஏற்றமிகு ஏழு திட்டங்களில் பொருளாதாரம், வேளாண்மை, நகர்புற வளர்ச்சி, சமூக பாதுகாப்பு உள்ளிட்ட 7 இலக்குகளின் அடிப்படையில் ஆட்சி இருக்கும் என ஏற்கனவே குறிப்பிட்டேன்” என தெரிவித்தார்.

பதவி ஏற்றவுடன் நான் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான இலவச பேருந்து திட்டம். இந்த திட்டம் பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக இளைஞர்களை கல்வியில் பன்முகத்தன்மையில் முன்னேறியவர்களாக உருவாக்க நான் முதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தேன். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில் 2 லட்சம் கோடி அளவில் புதிய முதலீடுகள் ஈர்கப்பட்டுள்ளன.

மழை காரணமாக நீர் வளம் பெருகி உள்ளது.வேளாண்மை செய்யும் பரப்பு அதிகரித்து சாகுபடி பெருகி உள்ளது. மனிதர்களே மனித கழிவுகளை அகற்றும் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் இன்று திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. அரசு என்பதை அதிகாரம் என்பதாக இல்லாமல் கடமையாகவும் சேவையாகவும் நினைத்து இலக்கு வைத்து பணி செய்து வருகிறேன் என தெரிவித்தார்.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பது பொதுவான இலக்கு. எனவே எளிய மக்கள் பயன்பெறும் எண்ணற்ற திட்டங்களை துவக்கி வைக்கிறேன், அந்த வகையில் மிக முக்கியமான ஏழு திட்டங்களை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கோட்டையில் நிறைவேற்றும் திட்டங்களை கடைக்கோடி மனிதர்களுக்கும் சென்று சேர வேண்டும் , கடைக்கோடி மனிதர்களின் நன்மைக்காகவே திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படுகின்றன. மாநிலங்கள் எல்லைகளால் உருவானது இல்லை , எண்ணங்களால் உருவானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com