தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லிக்கு பயணம்! 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லிக்கு பயணம்! 

தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் இன்றிரவு டெல்லி புறப்பட்டுச் சென்று நாளை காலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது; 

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த ஜூலை 28-ம் தேதி தொடங்கி, இம்மாதம் 9-ம் தேதி நடைபெற்றது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இப்போட்டிக்கான் துவக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், போட்டியை சிறப்பாக நடத்தியதற்காக பிரதமர் மோடி, வாழ்த்து தெரிவித்தார்.இதையடுத்து பிரதமருக்கு நேரில் நன்றித் தெரிவிக்கவும் தமிழக அரசு சார்பான கோர்க்கைகளை முன்வைக்கவும் முதல்வர் ஸ்டாலின் இன்றிரவு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். 

நாளை காலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரை சந்திக்கிறார். தொடர்ந்து மாலை 4 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நன்றி தெரிவிப்பதுடன் மாநிலத்துக்கான கோரிக்கை மனுவை அளிக்கிறார். பின்னர் நாளை இரவு முதல்வர் ஸ்டாலின் தமிழகம் திரும்புகிறார். 

இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. 

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com