கவர்னர் ரவி
கவர்னர் ரவி

கவர்னர் ரவி பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் கவர்னர் ரவி பதவி விலகவேண்டும்' என, தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, ம.தி.மு.க., பொதுச செயலர் வைகோ. மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் இணைந்து நேற்று வெளியிட்ட கூட்டறிக்கை தினமும் ஏதாவது சர்ச்சைக்குரிய கருத்தை சொல்வதை, கவர்னர் ரவி வழக்கமாக கொண்டு உள்ளார்.

கவர்னர் ரவி
கவர்னர் ரவி

அதற்கு காரணம், தமிழகத்தில் தேவையற்ற வீண் சர்ச்சைகளை உருவாக்கி, குழப்பம் ஏற்படுத்தும் நோக்கமா? அல்லது தன்னை நோக்கிய கவனிப்பு எப்போதும் இருக்க வேண்டும் என்ற தாகமா? என்று தெரியவில்லை.

இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமாகவே, கவர்னர் பேசத் துணிந்து விட்டார். 'எந்த ஒரு நாடும், ஏதாவது மதத்தை சார்ந்து தான் இருக்க முடியும்' என்று கவர்னர் சொல்வது, உலகம் அறியா பேச்சு.

இந்தியா மதச்சார்பற்ற நாடு என்கிறது அரசியல் சட்டம். மதத்திற்கு வக்காலத்து வாங்குபவராக கவர்னர் தன்னைக் காட்டிக்கொள்கிறார்.

இதுவே அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. அனைத்து மதங்களுக்கும், நடுநிலையானவராகவே கவர்னர் இருக்க வேண்டும்.

அனைத்து மதங்களுக்கும் சமமான உரிமை உண்டு என்கிறது, இந்திய அரசியல் சட்டம். ஆனால், அனைத்துக்கும் எதிராக பேசுகிறார் கவர்னர்.

கவர்னர் ரவி
கவர்னர் ரவி

இவை அனைத்தும் தெரிந்தே, வேண்டுமென்றே குழப்பம் ஏற்படுத்தும் எண்ணத்தோடு கவர்னர் பேசுகிறார் என்றே பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறோம், கண்டனம் தெரிவிக்கிறோம்.

கவர்னர் பதவியை விட பெரிய பதவி எதையாவது எதிர்பார்த்து, பா.ஜ., தலைமையை மகிழ்விக்க, ரவி இப்படி பேசுவதாக இருந்தால், கவர்னர் பதவியில் இருந்து விலகி கருத்துக்களை சொல்லட்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com