நாடாளுமன்ற திறப்பு விழாவில் 40 முறை "புதிய இந்தியா" என குறிப்பிட்ட பிரதமர் மோடி!

நாடாளுமன்ற திறப்பு விழாவில் 40 முறை "புதிய இந்தியா" என  குறிப்பிட்ட பிரதமர் மோடி!

140 கோடி இந்தியர்களை அடுத்து வரும் 25 ஆண்டுகளுக்கு வழிநடத்தப்போகும் இடமாக இருக்கும் என்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியிருக்கிறார். 2047ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்னும் இலக்கை நோக்கி பயணம் செய்வதில் புதிய பாராளுமன்றக் கட்டிடம் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

நேற்று புதிய பாராளுமன்ற கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. வேஷ்டி, குர்தாவில் பாராளுமன்ற சபாநாயகர் புடைசூழ வந்த பிரதமர், மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செய்தர். பின்னர் வேத முழக்கள் ஒலிக்க, கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. பின்னர் மங்கள ஓசை ஒலிக்க, தேவார திருமுறை பண் இசைக்க, தமிழகத்தை சேர்ந்த ஆதீனங்கள் புடைசூழ செங்கோலை ஏந்தியபடி வந்த பிரதமர் மோடி, நாடாளுமன்ற சபாநாயகரின் இருக்கைக்கு அருகே வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

பின்னர் சர்வ மத பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் நண்பகலில் நாடாளுமன்றத்தில் வருகை தந்த பிரதமர், ஜனநாயகம் என்பது சிஸ்டம் மட்டுமல்ல. அதுவே நம்முடைய கலாச்சாரம், பாரம்பரியம். இங்கே வைக்கப்பட்டுள்ள செங்கோல், நம்முடைய கடமையையும், சேவையையும், நாடு செல்ல வேண்டிய வழியையும் எடுத்துக்காட்டுவதாக குறிப்பிட்டார்.

35 நிமிடங்கள் தொடர்ந்த பிரதமர் மோடியின் உரையில் 40 இடங்களில் புதிய இந்தியா என்னும் வார்த்தை இடம்பெற்றிருந்தது. இது வெறும் கட்டிடமல்ல. 140 கோடி மக்களின் கனவுகளையும் விருப்பங்களையும் வெளிப்படுத்தும் இடம். இந்தியா ஜனநாயகத்திற்கான கோயிலாக வெளியுலகிற்கு பார்க்கப்படுகிறது என்றார். அடுத்து வரும் 25 ஆண்டுகளில் மக்கள் நலனுக்காக பல புதிய சட்டங்கள் இயற்றப்பட்டு, வளர்ச்சியடைந்த இந்தியா என்னும் இலக்கை நோக்கி அடைவதோடு, சுய சார்புள்ள இந்தியா உருவாகியிருப்பதை புதிய பாராளுமன்றக் கட்டிடம் உலகிற்கு தெரியப்படுத்தும் என்று குறிப்பிட்டார்.

பழைய பாராளுமன்ற கட்டிடம் 1927ல் திறக்கப்பட்டது. பிரிட்டிஷ் இந்தியாவின் ஆட்சி மன்ற கவுன்சில் கூடும் கட்டிடமாக அது முன்னர் இருந்து வந்தது. 64 யோகினி சிலைகளுடன் நடுவே சிவன் இருக்கும்படி அமைக்கப்பட்ட பல்வேறு யோகினி கோயில்கள் ஜபல்பூர், ஒடிசா, காஜீரோஙா போன்ற இடங்களில் இருக்கின்றன. அதே மாடலாக வைத்து அமைக்கப்பட்ட பாராளுமன்ற கட்டிடம் கட்டி 100 ஆண்டுகள் நிறைவடையும் தருணத்தில் இருககிறது.

பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகளுக்கு பின்னரே இந்தியர்களால், இந்தியர்களுக்காக கட்டப்பட்ட பாராளுமன்றக் கட்டிடம் என்கிற நிலையை அடைந்திருப்பதால் இந்தியாவின் தற்சார்பு குறித்தும், புதிய இந்தியா உருவாகியிருப்பது குறித்தும் பெருமிதத்தோடு பதிவு செய்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com