வாக்கு செலுத்தும்போது ஜெய் பஜ்ரங்கபலி என்று சொல்லுங்கள்! பிரச்சாரத்தில் மோடி அறைகூவல்!

வாக்கு செலுத்தும்போது ஜெய் பஜ்ரங்கபலி என்று சொல்லுங்கள்! பிரச்சாரத்தில் மோடி அறைகூவல்!

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸ் இடையேயான மோதல் உச்சத்தில் இருககிறது. முதல்முறையாக பிரச்சாரத்தில் மதவாத அரசியல் பிரதான இடத்தை பெற்றிருக்கிறது. தென்னிந்தியாவின் நுழைவாயிலான கர்நாடகாவில் வலுவாக கால் பதித்துள்ள பா.ஜ.க, ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள போராடி வருகிறது.

கடந்த இருபது ஆண்டுகளில் கர்நாடகாவில் பா.ஜ.க தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது. அதே நேரத்தில் பா.ஜ.கவின் இந்துத்துவா கொள்கைகள் சீரான அளவில் வளர்ச்சி பெறவில்லை என்பதுதான் உண்மை. லவ் ஜிகாத், திப்பு சுல்தான், ஹிஜாப், பசுக்களை கொலை செய்வது, மதமாற்ற தடைச்சட்டங்கள் உள்ளிட்டவை கிட்டூர் கர்நாடகா என்னும் எல்லையோர கர்நாடக பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுததியிருக்கின்றன.

படித்த லிங்காயத்துகள் தங்களை பிராமணர்களாக நினைத்துக் கொள்கிறார்கள். அவர்களில் நிறைய பேர் ஜோதிராவ் பூலேவின் வழி வந்தவர்களாக தங்களை வெளிக்காட்டி வருகிறார்கள். லிங்காயத்துக்களை தங்களை தனிப்பட்ட மதமாக நினைத்துக்கொள்வது 80 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இருந்து வருகிறது.

எண்பதுகளில் தலையெடுத்த ஒக்கலிகர்கள், காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்திருககிறார்கள். கடந்த இருபது ஆண்டுகளில் இந்துத்துவ எழுச்சி கர்நாடகாவில் தலையெடுத்திருக்கிறது. கட்சியைத் தாண்டி பல்வேறு சமூக மக்களிடம் தொடர்ந்து பெரிய தாக்கங்களை ஏற்படுததியிருககிறது. லிங்காயத்துகள், ஒக்கலிகர்களின் வாக்குகளை கவர பா.ஜ.கவும் காங்கிரஸ் கட்சியும் களத்தில் மோதிக்கொள்கின்றன.

நீங்கள் வாக்குச்சாவடியில் ஓட்டு பொத்தானை அழுத்தும்போது, ஜெய் பஜ்ரங்கபலி என்று கோஷமிடுமாறு பிரதமர் மோடி பிரச்சாரத்தில் குறிப்பிடுகிறார். அனைத்து இந்து சமூக மக்களையும் ஒருங்கிணைப்பது பா.ஜ.கவின் திட்டமாக இருந்து வருகிறது. ஆனால், பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியின் திறமையற்ற நிர்வாகத்தை மட்டும் குறிப்பிட்டு பேசுகிறார்.

கர்நாடகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவதே எங்களின் ஒரே குறிக்கோள் என்று பேசும் பிரதமர் மோடி, தவறான ஆட்சி நிர்வாகத்தால் காங்கிரஸ் கட்சி மக்களின் நம்பிக்கை இழந்துவிட்டது. காங்கிரஸ் கட்சி நாட்டை பல பத்தாண்டுகள் ஆட்சி செய்தபோது நாட்டின் வளர்ச்சியை விட தங்களின் சொந்த வளர்ச்சியில் தான் கவனம் செலுத்தினார்கள்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பயனாளர்கள் பட்டியலில் போலி பயனாளர்களின் பெயர்களை சேர்த்து முறைகேடு செய்திருக்கிறார்கள். அதன் மூலம் கருப்பு பணம் கஜானாவுக்கு சென்றது. அரசு நலத்திட்டங்களின் பயனாளிகளில் பட்டியலில் 10 கோடி பெயர்களை போலியாக சேர்த்திருக்கிறர்கள். கடந்த 9 ஆண்டுகளில் இந்த போலி பயனாளர்களின் பெயர்களை நீக்கியுள்ளோம். இதன் மூலம் ரூ.2¾ லட்சம் கோடி நிதி தவறானவர்களின் கைகளுக்குச் செல்வதை தடுத்து நிறுத்தியிருப்பதாகவும் பிரச்சாரம் செய்திருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com