ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்! தமிழக அரசு உத்தரவு !

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக அரசு தற்போது திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 3 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தலைமைச் செயலர் இறையன்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். சமூக பாதுகாப்பு இயக்குநர் வளர்மதி ஐஏஎஸ், ராணிப்பேட்டை ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், திருப்பத்தூர் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். திருப்பத்தூர் ஆட்சியர் அமர் குஷாவா இட மாற்றம் செய்யப்பட்டு, சமூக பாதுகாப்புத் துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

தமிழ் நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பின் தொடர்ந்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருவது வாடிக்கை தான். அந்த வகையில் கடந்த ஜனவரி 1ம் தேதி வெளியான அறிவிப்பில் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தனர். மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு ஆகியவை தொடர்பான விவரங்கள் வெளியாகி இருந்தன. அதன் பிறகு 30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் கடந்த ஜனவரி 30ம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

இதனை தொடர்ந்து தற்போது திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 3 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றி தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்ட நிலையில் அந்த மாவட்ட ஆட்சியர்கள் தற்போது இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரு நாட்களாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் மண்டலத்துக்குபட்ட வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டத்தை தொடங்கி வைத்து ஆலோசனை மேற்கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதன் பிறகு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com