மத்திய அமைச்சர் அமித் ஷா-வுக்கு சவுரவ் கங்குலி கொடுத்த விருந்து!

மத்திய அமைச்சர் அமித் ஷா-வுக்கு சவுரவ் கங்குலி கொடுத்த விருந்து!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் கொல்கத்தா சென்றபோது, அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது வீட்டில் விருந்து அளித்தார்.

மேற்கு வங்கத்திற்கு இரண்டு நாள் பயணமாக வந்த அமித் ஷா, கொல்கத்தாவின் விக்டோரியா மெமோரியல் ஹாலில் அம்மாநில கலாச்சாரத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த 'முக்தி-மாத்ரிகா' எனும் கலாச்சார நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அமித் ஷா சென்றிருந்தார். அந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் மனைவி டோனா கங்குலியும் அவரது திக்ஷா மஞ்சரி குழுவினரும் நடனம் ஆடினர்.

பின்னர் அமித் ஷாவுக்கு சவுரவ் கங்குலி தன் இல்லத்தில் சைவ உணவு விருந்தளித்தார்.

"எனக்கு அமித் ஷாவை 2008-ம் வருடம் முதல் தெரியும். பிசிசிஐ-யில் அவர் மகன் என் நண்பர். அதனால் அமித் ஷாவின் மகன் கொல்கத்தாவில் எங்கள் வீட்டிற்கு வரும்போது எங்களுடன் இரவு உணவு சாப்பிடுவார். அவரும் சரி..அமித் ஷாவும் சரி.. சைவ உணவுதான் சாப்பிடுவார்கல் என்பதால், அதையே விருந்துக்கு தயார் செய்தோம்" என்றார் கங்குலி.

சவுரவ் கங்குலியின் இல்லத்துக்கு பிஜேபி தலைவர்கள் சுவேந்து அதிகாரி மற்றும் அமித் மால்வியா ஆகியோருடன் அமித் ஷா வருகை தந்திருக்கிறார். அது சரி.. விருந்தில் பரிமாறப்பட்ட ஐட்டங்கள் என்னென்ன?!

அமித் ஷாவுக்கு பிடித்தமான அரிசி சாதம், ரொட்டி, லூச்சி, பேகன் பாஜா, ஷாஹி பன்னீர், தால் மக்கானி, தம் ஆலு, வெஜ் கட்லெட், காஜூ பர்ஃபி, மிஷ்டி தோய், ரஸகுல்லா ஆகியவை கங்குலி வீட்டு விருந்தில் பரிமாறப்பட்டன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com