சரக்கு வேணாம்...பசும்பாலைக் குடிங்க...!

மதுவிலக்கு வேண்டி நூதன முறையில் போராட்டம்!
சரக்கு வேணாம்...பசும்பாலைக் குடிங்க...!

குஜராத் தவிர எல்லா மாநிலங்களிலும், மது தாராளமாகக் கிடைக்கும். சாராயம், கள் உள்ளிட்டவைகளும் கிடைக்கும். சிறு வயது முதல் முதிர்ந்த வயது வரையுள்ள, 'குடிமகன்கள்' நாடெங்கிலும் ஏராளமாக உள்ளனர்.

மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், பாஜ.க.வின் மூத்தத் தலைவியான உமா பாரதி அவர்கள், மத்தியப் பிரதேச மாநிலத்தில் மது விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மதுபானக் கடைகளுக்கு முன்னால், பசு மாடுகளைக் கட்டி, அவைகளுக்கு வைக்கோல் கொடுத்து, நூதன முறையில், போராட்டம் நடத்தினார்.

மத்தியப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சிதான் ஆட்சியிலிருக்கிறது. இங்கு மது விற்பனை செய்ய, சட்டபூர்வமான அனுமதி இருக்கிறது. பா.ஜ.க‌ ஆளும் மாநிலங்களில், மது விலக்கை அமுல்படுத்த வேண்டுமென, கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இதே போல் பா.ஜ.க.ஆளும் மத்திய பிரதேசத்திலும், மதுவிலக்கை அமுல் படுத்த வேண்டும் என, அமாமாநில முனானாள் முதல்வரும், பாஜ.க.வின் மூத்த தலைவியுமான உமாபாரதி, போராட்டம் நடத்தி, வலியுறுத்தி, வருகிறார்.

இது மத்திய பிரதேச அரசுக்குத் தலைவலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு நடந்த மதுவிற்கு எதிரான பிரச்சாரத்தில், மத்திய பிரதேச முதலமைச்சர், சிவ்ராஜ் சிங் சவுகான், உமாபாரதியை பங்கேற்கச் செய்தார். ஆனாலும் சமாதானமாகாத, உமாபாரதி அவர்கள், தன்னிச்சையாகக் மதுக்கடைகளுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தி வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு, 'ஓர்ச்சா' பகுதியில், அரசு அனுமதியுடன் நடத்தப்படும் மதுக்கடை மீது, மக்கள் நிறையப் புகார்களைத் தெரிவித்தனர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அதிரடியாகக் களமிறங்கிய உமாபாரதி, மதுக்கடையின் மீது கற்களை வீசிப் போராட்டம் நடத்தினார். இது நாடெங்கிலும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இதன் பின்னர் மதுவிற்கு எதிரான தனது போராட்டத்தை, உமாபாரதி' தீவிரப்படுத்தினார். நேற்று இதே மதுக்கடையின் முன்பு திரிந்துக் கொண்டிருந்த, மாடுகளைப் பிடித்து வந்து, மதுக்கடையின் வாயிலில் கட்டி, அவைகளுக்குத் தீவனம் கொடுத்து, 'குடி மன்னர்களைப்' பார்த்து, மதுவுக்குப் பதில் பாலைக் குடியுங்கள், என தனது பிரசாசாரத்தை நூதன படுத்தியிருக்கிறார்.

இது மாநிலத்தில் மக்களின் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. என்னதான் பாஜ.க. மத்தியப் பிரதேசத்தில் ஆண்டாலும், உமாபாரதி தன்னிச்சையாக இது போன்ற போராட்டங்களில் ஈடுபடுவது, தனது பெயர் பிரபலமாவதற்குத்தான், என்று உட்கட்சியினரே சிலாகிக்கின்றனர். இவர் ஏற்கனவே மத்தியப் பிரதேச முதல்வராக இருந்திருக்கிறார். கர்நாடாக மாநிலம் 'ஹுப்லி' காவல் நிலையத்தில், இவர் மீதான வழக்கில், 2004ஆம் ஆண்டு, இவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப் பட்டதால், பா.ஜ.க‌. சிவராஜ் சிங் சவுகானை முதல்வராக நிறுத்தியது.

இந்த ஆண்டு நவம்பரில், மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தல் வருவதால், மீண்டும் முதல்வராவதற்குத் தான், உமாபாரதி, மதுவிற்கெதிரான போராட்டத்தை நடத்தி வருகிறார், என கட்சி வட்டாரத்தில், தெரிவிக்கிறார்கள். நேற்று நடந்த நூதனப் போராட்டத்தில், "மதுப் பழக்கத்தை பணமாக்காதே" எனக் கோஷமிட்டார்.

இது குறித்து மதுக் கடைக்காரர் கூறுகையில், "கடந்த முறை, இதேபோன்றதொரு போராட்டத்தில், கடையின் மீது சாணத்தை வீசி விட்டுச் சென்றார். அப்போது ஷட்டரை மூட வேண்டியதாகப் போயிற்று. தற்போது நடந்தப் போராட்டத்தாலும் கடையைப் பாதிலேயே, அடைக்க வேண்டியதாயிற்று" எனத் தெரிவித்தார். இதனிடையே, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், புதிய கலால் கொள்கையை அறிவிக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com