மோடி உலகம் சுற்றுவதன் பலன் என்ன?

மோடி உலகம் சுற்றுவதன் பலன் என்ன?

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை உலகம் முழுக்க சுற்றிக் கொண்டிருப்பவர்; அவ்வப்போது இந்தியாவுக்கு வருபவர்” என்று காங்கிரஸ்காரர்கள் கிண்டல் செய்வதுண்டு. ஆனால், மோடி இப்படி உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று உலகத் தலைவர்களை சந்திப்பதால்,  சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பெரும் மரியாதை கிடைக்கிறது என்பது சமீப காலமாக நிரூபணமாகி வருகிறது.

இந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவின் சி.பி.ஐ., சர்வதேச அளவிலான “தொண்ணூறாவது இன்டர்போல் ஜெனரல் அசெம்பிளி” என்ற சர்வதேச மாநாட்டை நடத்தியது. அதற்கு  உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 195 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள்.

அதனையடுத்து, ஐக்கிய நாடுகள் சபையின் தீவிரவாதத்துக்கு எதிரான மாநாடு ஒன்று மும்பையில் நடந்தது. அதில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்புனாட்டு பிரதிநிதிகளும் கலந்துகொண்டார்கள்.

 கடந்த நவம்பரில், நம் நாட்டின்  என்.ஐ.ஏ. எனும் தேசிய புலனாய்வு முகமை “தீவிரவாதத்துக்கு நிதி உதவத் தடை” என்ற மூன்றாவது சர்வதேச கருத்தரங்கினை  நடத்தியது. அதில் உலகின் 78 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள்.

இவை எல்லாம் போக, அண்மையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில்  ஜி 20 தொடர்பான மாநாடு ஒன்று நடந்தது!

அடுத்த ஆண்டில் இன்னும் என்னென்ன சர்வதேச மாநாடுகள், கருத்தரங்குகள் நடத்தலாம் என்று பல்வேறு அமைச்சகங்களும் மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்களாம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com