அருண் கோயலை நியமித்தது ஏன்? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கை விசாரித்துவரும் உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில், கொலிஜியம் என்ற முறை முக்கியப் பங்காற்றுகிறது. அதுபோல, தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கென சுதந்திரமான ஓர் அமைப்பு வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனுக்களை, நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய், சி.டி.ரவிக்குமார் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கினை நவம்பர் 22-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், “தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுபவர், அந்தப் பதவியில் ஆறு ஆண்டுகள்வரை இருக்க முடியும். ஆனால், கடந்த இருபது ஆண்டுகளில் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த ஒருவர் கூட, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அந்தப் பதவியில் இருந்ததில்லை. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களுக்கு குறுகிய காலமே பதவி வழங்கப்படுகிறது. இது மிகவும் கவலைக்குரியது" என்று கூறியுள்ளது.

central government
central government

மேலும், 18 ஆண்டுகளில் 14 தலைமைத் தேர்தல் ஆணையர்கள் மாற்றப்பட்டது குறித்து உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளியிட்டது. இந்த வழக்கு இரண்டாவது நாளாக விசாரிக்கப்பட்டபோது, மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். `தேர்தல் ஆணையர் நியமன நடைமுறைகள் குறித்த வழக்கு விசாரணையில் இருக்கும்போதே, கடந்த நவம்பர் 21-ம் தேதி அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார்’ என்ற விவகாரத்தைக் கிளப்பினார்.

அப்போது, தேர்தல் ஆணையர் நியமன நடைமுறைகள் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், அருண் கோயலை தேர்தல் ஆணையராக நியமித்தது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அவரின் நியமனம் தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com