சமூக ஊடகத்தில் சூப்பர் சோனிக் விமானத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு! அதை நீக்கியதால் சர்ச்சைக்குரிய விவாதத்திற்கு முற்றுப்புள்ளி!

சமூக ஊடகத்தில் சூப்பர் சோனிக் விமானத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு! அதை நீக்கியதால் சர்ச்சைக்குரிய விவாதத்திற்கு முற்றுப்புள்ளி!

கர்நாடக தலைநகர் பெங்களூரு நகரில் ஏரோ இந்தியா 2023 விமான கண்காட்சி நேற்று நடத்தப்பட்ட நிலையில், நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.

இதில் பலவிதமான விமானங்கள் இடம்பெற்று பார்வையாளர்களை வியக்க வைத்த நிலையில், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்.ஏ.எல்.) சார்பில் எச்.எல்.எப்.டி.-42 என்ற சூப்பர்சோனிக் விமானமும் இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்த விமானத்தின் வால் பகுதியில் கடவுள் அனுமனின் உருவ படம் இடம்பெற்றதோடு, "the storm is coming" என்ற வாசகமும் எழுதப்பட்டிருந்தது.

இந்த புகைப்படங்களை மத்திய சுரங்கம், நிலக்கரி மற்றும் நாடாளுமன்ற விவகார துறை மந்திரி பிரகலாத் ஜோஷி ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில், சூப்பர்சோனிக் விமானத்தின் வால் பகுதியில் அனுமனின் உருவ படம் இடம்பெற்றதையடுத்து, சமூக ஊடகத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி வந்தது. அதாவது போர் விமானத்தில் குறிப்பிட்ட இந்து கடவுளின் படம் இடம் பெற்றிருந்தது, வீரர்களின் மனநிலையை பாதிக்கும் என்றும், ஆயுத படைகள் எந்தவொரு மத அடிப்படையிலும் எதையும் தாங்கி இருக்கக்கூடாது என்பது போன்ற விஷயங்களும், சமூக ஊடகத்தில் விவாதப் பொருளாக மாறி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதை கவனத்தில் எடுத்துக்கொண்ட இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் உடனடியாக அனுமன் புகைப்படத்தை நீக்கி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com