ஷெனாய் நகர் திரு.வி.க. பூங்காவை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!

ஷெனாய் நகர் திரு.வி.க. பூங்காவை  முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!

ஷெனாய் நகர் திரு.வி.க. பூங்காவின் மேம்பாட்டு மற்றும் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததை முன்னிட்டு மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட உள்ளது. இன்று மாலை இந்த பூங்காவை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார்.

சென்னை மக்களின் பொழுதுபோக்கிற்காக, ஷெனாய் நகர் 'மெட்ரோ' ரயில் நிலையத்தில், திரு.வி.க. பூங்கா இருந்து வந்தது.

இந்த பூங்கா, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிதி உதவியுடன் 240 கோடி ரூபாய் மதிப்பில், புதுப்பொலிவுடன் பொழுதுபோக்கு பூங்காவாக மேம்படுத்தப் படுகிறது. இந்த பூங்காவில் பல்வேறு சிறப்பு அம்சங்களும் ஏற்படுத்தப் பட்டுள்ளது.வாகன நிறுத்தங்கள், உணவகங்கள், வணிக வளாகங்கள், 'லிப்ட்கள், எஸ்கலேட்டர்'கள் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் சர்வதேச தரத்தில் நவீன பொழுதுபோக்கு பூங்கா ஏற்பாடாகிறது.

படிப்பகம், சறுக்கு பயிற்சி, குழந்தைகள் பூங்கா, திறந்தவெளி திரையரங்கு, மட்டைப்பந்து பயிற்சி கூடம், நடைபயிற்சி பாதை, செயற்கை நீருற்று, இரவு நேரத்தில் பல வண்ண செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. யோகா மற்றும் தியானப் பயிற்சிக் கூடம், ஆண், பெண் என இருவருக்கும் தனித்தனியாக கூடைப்பந்து, பூப்பந்து, .கடற்கரை கைப்பந்து மைதானங்களும் அமைக்கப்படுகின்றன.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

பூங்காவின் 4 புறமும் மியாவாக்கி காடு போன்ற பல்வேறு வசதிகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த நவீன பொழுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

பூங்காவின் நுழைவாயிலில் இருந்து மெட்ரோ ரயில் நிலையம், தரைத்தளம், அடித்தளம் போன்ற இடங்களுக்கு எளிய வகையில் சென்று வர படிக்கட்டுகள், மின் தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு வருகிறது.

பூங்கா பணிகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இன்று மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது,

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com