சூப்பர் ஓவரில் கிடைத்த த்ரில் வெற்றி!

சூப்பர் ஓவரில் கிடைத்த த்ரில் வெற்றி!

இந்தியாவுக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த 2வது டி20 மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தநிலையில், ஆஸ்திரேலிய மகளிர் அணி சார்பாக, துவக்க ஆட்டக்காரர்களாக அலிசா ஹீலியும், பெத் மூனேவும் களமிறங்கினர்.

இந்நிலையில், முதல் விக்கெட்டாக அலிசா ஹீலி 25 ரன்கள் எடுத்த நிலையில் தீப்தி ஷர்மா பந்தில் அவுட்டாகி வெளியேறினார். அதனையடுத்து டகிலா மெக்ராத் களமிறங்கினார். இந்நிலையில் அடுத்து விக்கெட் எதுவும் விழாதவாறு பார்த்துக்கொண்ட பெத் மூனே 82 ரன்னுடனும், டகிலா மெக்ராத் 70 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனால் ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 20 ஓவர் முடிவில் 187 ரன்கள் எடுத்தனர்.

அடுத்து இந்திய அணி சார்பில் ஸ்மிரிதி மந்தனா, ஷஃபாலி வர்மா துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்நிலையில் ஸ்மிரிதி மந்தனா மட்டும சிறப்பாக விளையாடி 49 பந்துகளில் 79 ரன்களைக் குவித்தார். மற்ற வீரர்கள் பெரிய ஸ்கோரை எடுக்காவிட்டாலும், ஓரளவுக்கு விளையாடிய நிலையில், இந்திய மகளிர் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிரா செய்தனர்.

இந்நிலையில், வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.

முதலில் இந்திய அணி சார்பாக ரிச்சா கோஷ், ஸ்மிரிதி மந்தனா களத்தில் இறங்கினர். முதல் பந்தில் ரிச்சா கோஷ் ஒரு சிக்சர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ஸ்மிருதி மந்தனா ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி, அடிக்க 1 ஓவர் முடிவில் இந்திய அணி 20 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி சார்பில் 2 பவுண்டரி, 1 சிக்சர் என அடிக்கப்பட்டும் 16 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

இந்நிலையில், டி20 போட்டிகளில், 16 முறை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்று வந்துள்ளதை இந்திய அணி தன்னுடைய வெற்றியின் மூலம் தடுத்து நிறுத்தியுள்ளது.

இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, 5 போட்டிகள் கொண்ட தொடரின் 3வது டி20 போட்டி 14ந் தேதி இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com