குஜராத் அணியை வீழ்த்திய டெல்லி கேப்பிடல்ஸ்!

குஜராத் அணியை வீழ்த்திய டெல்லி கேப்பிடல்ஸ்!

நேற்றைய போட்டி டெல்லி அணிக்கும், குஜராத் அணிக்கும் நடைபெற்ற நிலையில் டெல்லி அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது.

அகமதாபாத், நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று, ஐபிஎல் 16வது சீசன் தொடரின் 44வது போட்டி நடைபெற்றது. இதில் டெல்லி அணியும், குஜராத் அணியும் மோதியது. டாஸை வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து, பில் சால்ட் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் களமிறங்கினர். ஆனால் எதிர்பார்த்த துவக்கம் நேற்று அமையவில்லை. துவக்க ஆட்டக்காரர்கள் அனைவரும் மளமளவென தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இருந்தாலும், அக்ஸர் படேல் 30 பந்துகளில் 27 ரன்களும், ஹக்கிம் கான் 44 பந்துகளில் 51 ரன்களும், ரிபல் படேல் 13 பந்துகளில் 23 ரன்களும் எடுத்ததையடுத்து, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தனர்.

இதையடுத்து, 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்கை நோக்கி குஜராத் அணி களமிறங்கியது.

ஆனால் குஜராத் அணியின் துவக்க வீரர்களும் சிறப்பான துவக்கத்தை அளிக்கவில்லை. அந்த அணியில் ஹார்திக் பாண்டியா 53 பந்துகளில் 59 ரன்களும், அபினவ் மனோகர் 33 பந்துகளில் 26 ரன்களும், டிவாட்டியா 7 பந்துகளில் 20 ரன்களும் எடுத்ததையடுத்து, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து, டெல்லி அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com