சரித்திரம் நிகழாமல் தடுத்திருக்கலாம்! ஆனால் நடந்தது என்னவோ...

Garry Sobers
Garry Sobers

கிரிக்கெட்டில் கைக்கு எட்டி, கிடைக்காமல்கூட போகலாம் என்பதற்கு உதாரணமாக விளையாட்டு மைதானத்தில் நடந்த இரண்டு சம்பவங்களை இங்கே காணலாம்.

ஒரு புகழ்பெற்ற நிகழ்வு நிகழாமல் போய் இருக்க வந்த வாய்ப்பு நிராகரிக்கப்பட்டு, சரித்திரம் படைத்த நிகழ்ச்சி இது.

31.08.1968ல் இங்கிலாந்தில், ஸ்வான்சி (Swansea) பகுதியில் முதல் தர கிரிக்கெட் மேட்ச் நடைப்பெற்றது. நாட்டிங்ஹாம்ஷையர் (Nottinghamshire) மற்றும் க்ளாமோர்கான் (Glamorgan) அணிகளுக்கு இடையே புது ஓவர் தொடங்கியது. வேகப்பந்து வீச்சாளர் மால்காம் நாஷ் (Malcom Nash) அந்த ஓவரில் ஸ்பின் பவுலிங் வீச தயார் ஆனார். இடது கை பந்து வீச்சாளர், இடது கை பேட்ச்மன் காரி சோபர்ஸுக்கு (Sir Garfield Sobers) வீசிய ஆறு பந்துகளையும் சிக்ஸர்களாக அடித்து நொறுக்கி உலக சாதனை புரிந்தார் சோபர்ஸ். 

முதல் மூன்று பந்துகளும் சிக்ஸர்களாக மாறிய நிலையில், பந்து வீசிய அணியின் கேப்டன் டோனி லீவிஸ் (Tony Lewis),  பவுலர் நாஷிடம் உங்களுக்கு வேகப்பந்து வீசுவது திறமையாக வரும். பேசாமல் கடைசி மூன்று பந்துகளை ஸ்பின் போடுவதற்கு பதிலாக வேக பந்துகளாக வீச யோசனையும், ஆலோசனையும் கூறினார். மேலும் ஸ்பின் போடுவதிலிருந்து வேகப்பந்துகள் வீச முக்கியமான வாய்ப்பையும் வழங்கினார். இந்த வாய்ப்பினால், விக்கெட் எடுக்கவிட்டாலும் உங்களது வேகப்பந்து வீசும் அனுபவத்தினால் சிக்ஸர்கள் அடிப்பதை தவிர்க்கலாம், கட்டுப்படுத்தலாம், என்றும் கூறினார். ஆனால் பவுலர் நாஷ் என்ன நடக்க போகிறது என்பதை உணராமல், அந்த வாய்ப்பை கை நழுவ விட்டார். குறிப்பிட்ட ஓவர் முடிவில் சரித்திரம் படைக்கப்பட்டது.

ஆறு பந்துகளில் சிக்ஸர்களை எடுத்து முடித்ததும், காரி சோபர்ஸ், புன் முறுவல் செய்தபடி, தனது பேட்டை தூக்கி காண்பித்தார். கூடியிருந்த பார்வையாளர்கள் மற்றும் ஆட்டக்காரர்கள் கைகளை தட்டி வாழ்த்தினர். அவ்வளவுதான் அப்பொழுது அங்கு கொண்டாட்டம் நிறைந்து வழிந்தது.

இந்த அரிய ரிக்கார்டை அன்று ஏற்படுத்தியதற்காக காரி சோபர்ஸுக்கு பணமோ, பரிசோ கொடுக்கப்படவில்லை.

ஒரு முறை சோபர்ஸ் கூறினார் சிரித்திக் கொண்டே, அந்த பவுலர் மால்காம் நாஷை அருகில் வைத்துக் கொண்டே, "கஷ்டப்பட்டு சிக்ஸர்களாக நான் அடித்து உலக ரிக்கார்ட் செய்தேன். போகிற இடங்களில் இவர் எப்படி பந்துகள் வீசினார் என்று கூறி, அவ்வாறு லெக்சர் செய்வதற்கு பணம் வேறு வசூலித்து விடுகிறார்" என்று கூறினார்.

மற்றொரு நிகழ்வு:

க்ளெம் ஹில் (Clem Hill) என்ற இடது கை ஆட்டக்காரரான இவர், ஆஸ்திரேலிய டீமிற்கு விளையாடியவர். பத்து டெஸ்ட் மேட்சுகளில் கேப்டனாக திகழ்ந்த இவர் மொத்தம் 49 டெஸ்டுகள் ஆடியுள்ளார். இவர் மெத்தம் 7 சதங்களும், அதிகபட்ச 191 ரன்களும் குவித்தவர். மொத்தம் 3412 டெஸ்ட் ரன்கள் எடுத்தவர். ஒரு காலண்டர் வருட கணக்கில் 1000 ரன்களுக்கு மேல் குவித்த முதல் கிரிக்கெட் வீரர் இவர்தான்.

Clem Hill
Clem Hill

இவருக்கு மூன்று முறை சதங்கள் கண்களுக்கு எதிரில் வந்தும் கை நழுவி போயின, அதுவும் தொடர்ந்தார் போல. 

மெல்போர்ன் மைதானத்தில் டெஸ்ட் ஒன்றில் இவர் 99 ரன்கள் எடுத்த பொழுது அவுட் ஆனார். இவர் தான் டெஸ்ட் சரித்திரத்தில் 99 ரன்களில் அவுட் ஆன முதல் ஆட்டக்காரர் என்ற பட்டத்தையும் பெற்றார். அதைத் தொடர்ந்து, அடிலெய்ட் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இவர் எடுத்தது 98 ரன்கள். அடுத்த இன்னிங்சில் 97 ரன்கள் எடுத்த பொழுது விளையாட நினைத்த பந்து சரியாக படாமல் உருள தொடங்கியது. அதை தள்ளி விட முயலும் பொழுது எதிர்பாரா வண்ணம் ஸ்டெம்ப்பின் மீது இருந்த ஒரு பெயில் கீழே விழுந்து அவுட் ஆனார். இதை தவிர ஒருமுறை 96 ரன்கள் எடுத்த பொழுதும் சதத்தை தவற விட்டவர்.

சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்த இவர் ஒரு அருமையான பீல்டரூம் கூட.

1902 ஆம் வருடம் ஒரு டெஸ்ட் மேட்சில் இங்கிலாந்து டீம் வெற்றி பெற 8 ரன்கள் தேவை. அவர்கள் வசம் இரண்டு விக்கெட்டுகள் இருந்தன. இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஸ்கொயர் லெக் நோக்கி தூக்கி அடிக்க பந்து மேல் எழும்பி பவுண்டரியை நோக்கி சென்று கொண்டிருந்தது. லாங் ஆன் இடத்திலிருந்து சிறுத்தைப் புலி போல் பாய்ந்து சென்ற ஹில் அந்த பந்து தரையில் விழுவதற்கு முன் தாவி கேட்ச் பிடித்தார். இவரது சிறப்பு மிக்க அந்த கேட்ச்சால் ஆஸ்திரேலிய அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

1877ல் பிறந்த இவர் தனது 68 வது வயதில் 1949 ஆம் ஆண்டு மறைந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com